பணியில் இருப்பவர்களோ, பிசினஸ் செய்பவர்களோ தனக்கு மாத வருமானம் சராசரியாக எவ்வளவு வருகிறதோ, அதிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் இ.எம்.ஐ செலுத்தும் வகையில் கடன் வாங்கினால் பெரிய அளவில் சிக்கல் வராது. ஆனால், வரும் வருமானம் மொத்தமும் கடன் கட்டவே சென்றுவிடும் அளவுக்குக் கடனை வாங்கிக் குவித்தால் என்ன ஆகும்..?

கோவையைச் சேர்ந்த ரமேஷின் கம்பெனியில் வரும் மாத வருமானம் ரூ.5 லட்சம்; செலவுகள் மற்றும் கடன் செலுத்தும் தொகை ரூ.5 லட்சம். இப்படியிருந்தால் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து யோசிப்பதற்குப் பதிலாக, கடனை எப்படி கட்டி முடிக்கப்போகிறமோ என்ற கவலைதான் மேலோங்கி நிற்கும். அந்தக் கவலையோடுதான் ரமேஷ் நம்மிடம் பேசினார்.

“எனக்கு வயது 29. என் அப்பா கோவையில் டெக்ஸ்டைல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தலையணை உறைகள், பெட்ஷீட், கால்மிதிகள் உள்ளிட்ட பல பொருள்களைத் தயாரிக்கிறோம். அப்பாவுக்கு 60 வயது. நான் படிப்பை முடித்துவிட்டு, சமீபத்தில்தான் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. என் குழந்தைக்கு ஒரு வயதாகிறது.

கம்பெனியில் பல புதிய மாற்றங்களைச் செய்ய ஆசைப் பட்டு, ஏற்கெனவே அப்பா வாங்கிய கடன்கள் இருக்க, மேலும் புதிய கடன்களை வாங்கினேன். அப்பா ஏற்கெனவே பிசினஸ் வளர்ச்சிக்காக ரூ.1.50 கோடி 18% வட்டியில் கடன் வாங்கியிருந்தார். இதற்கான வட்டி மட்டும் மாதம் ரூ.2.25 லட்சம் செலுத்தி வருகிறேன்.

நான் நவீன இயந்திரங்களை வாங்குவதற்காக வங்கியில் ரூ.1.50 கோடி 10% வட்டியில் கடன் வாங்கினேன். இந்தக் கடனுக்கு வட்டி மட்டும் மாதம் ரூ.1.25 லட்சம். ஏற்கெனவே கல்விக்கடன் 11 லட்சம் வாங்கியதில் இன்னும் 7 லட்சம் நிலுவையில் உள்ளது. இதற்கான இ.எம்.ஐ ரூ.22 ஆயிரம்.

வங்கி டேர்ம் லோன் ரூ.60 லட்சம் வாங்கினேன். இன்னும் ரூ.30 லட்சம் செலுத்த வேண்டும். இதற்கான இ.எம்.ஐ ரூ.1.20 லட்சம்.

சொத்து என்று பார்த்தால் சொந்த வீடு அல்லாமல், ரூ.50 லட்சம் மதிப்புள்ள மனை ஒன்று உள்ளது. அப்பா லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று 7 வருடங்களுக்கு முன் எடுத்திருந்தார். 16 வருடங்கள் கொண்ட அந்த பாலிசி 2027-ல் முதிர்வடையும். முதிர்வுத் தொகை மற்றும் போனஸ் சேர்த்து ரூ.90 லட்சம் வரை கிடைக்கும். ரூ.10 லட்சம் மதிப்புக் கொண்ட பாலிசி ஒன்றும் உள்ளது. இது அடுத்த ஆண்டில் முதிர்வடையும். இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியம் மட்டும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை செலுத்துகிறேன்.

மாதம் ரூ.5 லட்சம் வரை வருமானம் வருகிறது. வட்டி, இ.எம்.ஐ, பணியாளர் சம்பளம் என மொத்தம் ரூ.5 லட்சம் வரை ஆகிவிடுவதால் வரவுக்கும் செலவுக்கும் சரியாகப் போய் விடுகிறது. கடனை மாற்றி அமைக்கவும், கட்டி முடிக்கவும், எதிர்காலத்துக்கான முதலீடுகளை ஆரம்பிக்கவும் ஆலோசனை சொன்னால் உதவியாக இருக்கும்” என்றார்.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“எப்போதுமே எந்த பிசினஸாக இருந்தாலும் பிசினஸுக்காக வாங்கப்படும் கடனும், பிசினஸில் செய்யப்படும் முதலீடும் 2 : 1 (Debt to Equity Ratio) என்ற விகிதத்தில் இருந்தால் பிரச்னை இருக்காது. அப்படியில்லாத காரணத்தால்தான் உங்களுக்குச் சிக்கலே வந்துள்ளது. உங்களுடைய வருமானத்துக்கும் செலுத்துகிற கடனுக்குமான விகிதாச்சாரம் 98%-ஆக உள்ளது. வருமானத்துக்கும் கடனுக்குமான விகிதாச்சாரம் 50 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டியது மிக அவசியம்.

முழு உற்பத்தித் திறனையும் பயன்படுத்தித்தான் பிசினஸ் செய்கிறீர்கள். ஆனாலும், வருமானம் மொத்தமும் கடனுக்கே போய் விடுகிறது. உங்களுக்கு இருக்கும் ஒரே வழி நீங்கள் வருமானத்தை அதிகப் படுத்துவது மட்டுமே. உங்கள் தயாரிப்புகளில் 25% அளவுக்கு கூடுதல் தரம்கொண்ட விலை உயர்ந்த பொருள்களைத் தயாரிப்பதன் மூலம் வருமானத்தை அதிகப்படுத்த முடியும்.

கடனை அளவுக்கு மீறி வாங்கியது தவறு என்றால், 18% வட்டிக்கு கடன் வாங்கிவிட்டு வெறும் 5.5% வருமானம் தரும் பாலிசிகளை எடுத்து வைத்திருப்பது மிகப்பெரிய நிதித் தவறு. இப்போது குளோஸ் பண்ணினால் நஷ்டம்தான். எனவே, 30 லட்சம் வரை அந்த பாலிசி மூலம் லோன் வாங்கிக்கொள்ளுங்கள். அடுத்த வருடம் முதல் பெய்ட்அப் பாலிசியாக மாற்றிக்கொள்ளுங்கள். அடுத்த வருடம் முதிர்வடையும் பாலிசியை சரண்டர் செய்வதன் மூலம் 95% தொகை, அதாவது ரூ.9.5 லட்சம் பெறலாம். இந்தத் தொகை களைக் கொண்டு உங்கள் அப்பா வாங்கிய கடனில் ரூ.40 லட்சம் வரை அசலை அடைத்துவிடவும். இதனால் அந்தக் கடனுக்கான வட்டி ரூ.1.65 லட்சமாகக் குறையும். ரூ.60 ஆயிரம் உங்களுக்கு மிச்சமாகும்.

உங்கள் அப்பாவின் பாலிசியை பெய்ட்அப் பாலிசியாக மாற்றிய பிறகு, ரூ.50 லட்சம் வரைக்கும் டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளவும். உங்கள் அப்பா வாங்கிய கடன் முழுமையாக அடைக்கப்பட்ட பிறகு இந்த டேர்ம் பாலிசியை நிறுத்திவிடலாம். பாலிசிகளின் பிரீமிய தொகையாகச் செலுத்திவரும் ரூ.5 லட்சத்தை அடுத்த ஆண்டுமுதல் அப்பாவின் கடனை அடைக்கப் பயன்படுத்தவும். 2020-ல் உங்களின் டேர்ம் லோன் முடிந்ததும் புதிதாக டேர்ம் லோன் வாங்கி, அப்பாவின் கடன் முழுவதையும் அடைத்துவிடவும். இப்படிச் செய்வதன் மூலம் மாதம் ரூ.1 - 1.5 லட்சம் வரை மீதமாகும். உற்பத்தி ஸ்ட்ராடஜியை மாற்றுவதன் மூலம் இன்னும் கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

எப்போதுமே நீங்கள் பிசினஸ் லோன் வாங்கும்போது, அதற்கேற்ப டேர்ம் இன்ஷூரன்ஸ் சேர்த்தே வாங்க வேண்டும். இப்போது வருமானம் மொத்தமும் வட்டிக்கும் கடனுக்குமே போய்விடுவதால், வங்கி லாபம் சம்பாதிக்க நீங்கள் தொழில் நடத்துவதுபோல ஆகிவிட்டது. இதேபோன்ற நிலை மீண்டும் வாராமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். ஓரளவுக்குக் கடன் அடைக்கப்பட்ட பிறகு எதிர்கால முதலீடுகள் குறித்து யோசிப்பதுதான் சரியாக இருக்கும். அப்பா வாங்கிய ரூ.1.50 லட்சம் கடன் முடிந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்துவதுடன், எதிர்கால முதலீடுகளுக்கும் திட்டமிடலாம்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com)

is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878

- கா.முத்துசூரியா

ஓவியம்: ராஜேந்திரன்

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிப்பவரா..?

finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் கடன் விவரங்கள், பொருளாதாரச் சூழல், வரவு-செலவு, முதலீட்டு விவரங்களை உங்கள் செல்போன் எண்ணுடன் தெளிவாக எழுதி அனுப்புங்கள். சிக்கலில் இருந்து விடுபடக்கூடிய தீர்வுகளைச் சொல்கிறோம்.

உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.

தொடர்புக்கு: 9940415222

மாற்றம் ஏமாற்றமாக மாறிவிடக்கூடாது!

“பிசினஸில் புதிய மாற்றங்கள் அவசியம்தான். ஆனால், செய்யப்படும் மாற்றங்களால் தற்போதைய நிலையைவிட லாபம் அதிகரிப்பதாக இருக்க வேண்டும். மாற்றம் செய்யப்படுவதற்காகச் செய்யப்படும் செலவுகளையும், மாற்றத்தின் மூலம் விளையும் பயன்பாடுகளையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும். புதிய மாற்றங்கள் இழப்புகளை ஏற்படுத்திவிடக்கூடுமா என்ற கோணத்திலும் யோசிக்க வேண்டியது அவசியம். பாசிட்டிவ் நெகட்டிவ் கருத்துகளை எடைபோட்டுப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். தன் விருப்பம் சார்ந்த முடிவுகளில் பிடிவாதமாக இருப்பவர்களில் பெரும்பாலோர் நெகட்டிவ் கருத்துகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இப்படி ஒரே கோணத்தில் சிந்திப்பவர்கள் நஷ்டங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.”