கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் ரொக்கமாகப் பணத்தை வைத்திருப்பது அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில், இப்போது நீங்கள் பணத்தை எப்படிப் பரிமாற்றம் செய்கிறீர்கள் என்கிற கேள்வியை நாணயம் ட்விட்டர் சர்வேயில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டோம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டு பதில் சொன்னவர்களில் 25% பேர், தாங்கள் ரொக்கப் பணமாகத் தந்து ரொக்கமாகவே வாங்கிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். நிஜத்தில் இப்படிச் செய்கிறவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 29% பேர், தாங்கள் ஆன்லைனில் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்வதாகச் சொல்லி யிருக்கிறார்கள். இப்படிச் சொன்னவர்களில் பலரும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களாகவும், பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் பணப் பரிமாற்றம் செய்பவர்களாகவுமே இருப்பார்கள்.

ஆனால், 46% பேர் மட்டுமே ஆன்லைனில் கொஞ்சமாகவும், ரொக்கப் பணத்தைப் பெருவாரியாகவும் பரிமாற்றம் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். சூப்பர் மார்க்கெட், பெரிய வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதியைத் தற்போது அளிக்கின்றன. பிற நிறுவனங்கள் ரொக்கமாகப் பணப் பரிமாற்றம் செய்வதையே விரும்புகின்றன. ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை எல்லா நிறுவனங்களும் அளித்தால், ரொக்கமாகப் பணப் பரிமாற்றம் செய்வதை பலரும் குறைத்துக்கொள்வார்கள். அதற்குத் தேவையான நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும்!

- ஏ.ஆர்.கே