ஹலோ வாசகர்களே..!

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நேரடி வரி வருவாய் ரூ.4.89 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 15.7% அதிகம் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், அதிகரித்துவரும் இந்த வரி வருமானத்துக்கு சிலர் மட்டுமே காரணமாக இருக்கிறார்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியைப் பலரும் கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்கிற உண்மை, வருமான வரித்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தாலே தெளிவாகத் தெரிகிறது.

கடந்த 2013-14-ம் ஆண்டு தொடங்கி 2016-17-ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுக் காலத்தில் சம்பளம் வாங்குபவர்கள் தங்களுக்கான வருமான வரியைக் கட்டுவது ஆண்டுக்காண்டு அதிகரித்துவர, சுயதொழில் செய்பவர்கள் வருமான வரி கட்டுவது அந்த அளவுக்கு உயரவில்லை. கடந்த 2016-17-ல் சம்பளம் வாங்குபவர்கள் கட்டிய சராசரி வரி வருமானம் ரூ.6.8 லட்சம். ஆனால், சுயதொழில் செய்பவர்கள் கட்டிய சராசரி வரி வருமானம் ரூ.5.2 லட்சம் மட்டுமே.

சுயதொழில் செய்யும் பிரிவில் பல வகையினர் இருக்கிறார்கள். உதாரண மாக, ஒரு மருத்துவரின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.5.2 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா? இன்ஜினீயர்கள், கடை நடத்துபவர்கள் எனப் பலரது ஆண்டு சராசரி வருமானம் ரூ.5.2 லட்சத்துக்குள் எனில், எப்படி நம்புவது?

இப்படிப் பலரும் தங்கள் உண்மையான வருமானத்தைக் காட்டாமல், அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாமல் தவிர்க்கக் காரணம், தங்கள் வருமானத்தை ரொக்கமாகப் பெறுவதினால்தான். ஒரு பொருளை வாங்கும்போதோ அல்லது ஒரு சேவையைப் பெறும்போதோ பணத்தை ரொக்கமாக வாங்கினால், அது கணக்கில் வராமலே போய்விடுகிறது. கணக்கில் வராத பணத்துக்கு யாரும் வரி கட்டுவதில்லை.

ரொக்கப் பணப் பரிவர்த்தனையைக் கணிசமாகக் குறைக்கத் தேவையான நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுத்தால் மட்டுமே சுயதொழில் செய்பவர்கள் வருமான வரியைக் கட்டுவது அதிகரிக்கும். நூறு ரூபாயைத் தரவேண்டும் என்றாலும், அதை ரொக்கமாகத் தராமல், டிஜிட்டல் முறையில் தருகிற அளவுக்கு அடிப்படை வசதிகளை மத்திய அரசாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும். இப்படித் தருவதுடன், இந்த முறையை எல்லோரும் பின்பற்ற வற்புறுத்தவும் வேண்டும். அரசின் வருமானம் அதிகரித்தால்தான் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களுக்கு அதிகம் செலவு செய்ய முடியும்.

இந்த விஷயத்தில் அரசாங்கமே அத்தனை விஷயங்களையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் சரியாகக் கட்ட வேண்டும் என்கிற சிந்தனை மக்களிடமும் ஏற்பட வேண்டும். எல்லோரும் சரியாக வரியைக் கட்டினால் ஒட்டுமொத்த மக்களின் வரிச் சுமையும் குறையும் என்பதை நாம் எல்லோருமே புரிந்துகொள்ள வேண்டும்!

- ஆசிரியர்