Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37

வாஷிங்டன் DC

நிக்கி டான் சிகிச்சை பெற்றுவரும் ஜார்ஜ் வாஷிங்டன் க்ரிடிக்கல் கேர் ஆஸ்பத்திரிக்கு ஏட்ரியன் சென்றுகொண்டிருந்தார். அவர் இன்னும் கோமா நிலையிலிருந்து மீளவில்லை.

நிக்கி படுத்திருக்கும் படுக்கைக்கு அருகே உட்கார்ந்து ஏட்ரியன் அவரைப் பார்க்க, அவர் அமைதியாக இருந்தாலும் உடனே எழுந்து அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடப்போவது போன்ற ஒரு தோற்றத்துடன் இருந்தார்.

அவரைப் பற்றிய சில கேள்விகள் ஏட்ரியனைக் கவலைப் பட செய்தன. மற்ற பிரச்னை களிலிருந்து விலகி இருக்கவேண்டும் என்பதற்காக தன் மகளுக்குப் போதை மருந்து வாங்க உதவி யிருக்கும் அம்மாவை அவர் ஒருபோதும் பார்த்ததில்லை. அதைவிடப் பெரிய பிரச்னை, ஏ.டி.எம் கொள்ளை குற்றம் புரிந்தவர்களுடன் சேர்ந்திருந்த ஒருவருடன், கொள்ளை நடந்த இடத்தில் இவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37

டான் வீட்டுக்கருகில் இருக்கும் சைபர் கஃபேக்கு டோனி சென் றார். ஆனால், அது மூடப்பட்டு அந்த இடத்தில் டன்கின் டொனாட்ஸ் (Dunkin’ Donuts) கடை முளைத்திருந்தது. பழைய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சி.சி.டி.வி கேமராவின் பதிவையும் பெற முயற்சி செய்தார். ஆனால், டன்கின் டொனாட்ஸ் அந்த இடத்தைக் கையகப் படுத்திய போது அனைத்தையும் அழித்து விட்டிருந்தார்கள்.

கதவைத் தட்டிய சப்தம் அவரது சிந்தனையைக் கலைத்தது. 
   
‘`க்ளோரியா! எப்படி இருக்கிறாய்?’’ க்ளோரியா வருவாள் என ஏட்ரியன்  சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

‘`ஓ, ஹலோ, ஏஜென்ட் ஸ்காட்!”

தான் இந்த வழியாகச் செல்ல வேண்டியிருந்ததால், அப்படியே அம்மாவையும் பார்த்துவிட்டுப் போகலாமே என வந்ததாகக் கூறிக்கொண்டே எழுந்தார்.

அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். அவரது மனதில் ஆயிரக்கணக்கான கேள்விகள் இருந்தன.  ‘`க்ளோரியா, உங்கள் வீட்டுக்கு அருகில் இன்டர்நெட் கஃபே ஒன்று இருந்தது, அப்படித்தானே?’’ என்று கேட்டுக்கொண்டே வரைபடத்தைக் காண்பித்தார்.

அவள் அதைப் பார்த்துவிட்டு, ‘‘இங்கதானே இப்போது டன்கின் டொனாட்ஸ் இருக்கிறது, இல்லையா?’’ எனக் கேட்டாள்.

‘`ஆமாம், இது பிரபலமான ஓர் இடமா?”

‘`உறுதியாகத் தெரியவில்லை ஆனால், அம்மா அங்கே சில நேரங்களில் செல்வதுண்டு.  அவருடைய நண்பர்களைப் பார்த்துப் பேசுவதற்காக.”

‘`அவர்கள் எல்லாம் யார்?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37

‘`சிலர் என்னைத் தத்து எடுக்க அவருக்கு உதவியவர்கள். சிலர் லண்டனில் இருக்கும் தத்தெடுப்பு காப்பகத்தைச் சேர்ந்தவர்கள். என் நிஜ பெற்றோருக்கு வேண்டப்பட்ட சில உறவினர்கள். அத்துடன், சில நண்பர்களும்...”

‘`அவர்களில் யாரையாவது நீ சந்தித்திருக்கிறாயா?”

‘`செப்டம்பர் இறுதியில், ஒரு மாதத்திற்கும் மேலாக நானும், அம்மாவும் மட்டும் ஐரோப்பா முழுவதும் சுற்றினோம். அது மிகவும் குதூகலமாக இருந்தது…” என்றவளுடைய கண்களில் கண்ணீர்.
 
ஏட்ரியனுக்கு லேசாக மனவருத்தம் ஏற்பட அவர், “அவர்களோடு தொடர்பு கொள்ள தகவல்கள் ஏதேனும் இருக்கிறதா?” எனக் கேட்டார்.

‘`தேடிப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு, தன் பேக்கி லிருந்து ஐபேடை எடுத்து, சில தகவல்களை அவரிடம் கொடுத்தாள். உற்சாகமான ஏட்ரியன் அங்கிருந்து கிளம்பி னார்.

க்ளோரியாவும், அவளுடைய அம்மாவும் செப்டம்பர் மாத இறுதியில் லண்டனுக்குச் சென்றி ருக்கிறார்கள். அக்டோபர் மாதம் இன்டர்நெட் கஃபேயிலிருந்து ஆல்டாயிட்ஸ் இறுதியாக லாக்-இன் செய்திருக்கிறார். அது இவர்களாக இருக்காது. காரில் இருக்கும்போது, நீண்ட சிந்தனைக்குப்பிறகு, அவர் டோனியை அழைத்தார்.

‘`லண்டன் செல்ல உங்களுக்கு விருப்பமா? இன்றிரவு கிளம்பி, ஞாயிறன்று திரும்பிவிடலாம்!”

‘`எதற்காக?”

‘`நிக்கி டான் நண்பர்களுடன் ஓர் அவசர சந்திப்புக்காக.”

டோனி அவர் படித்துக் கொண்டிருந்த பேப்பரைத் தள்ளி வைத்தார். அவருடைய முகத்தில் எரிச்சல். பேப்பரில் இரண்டு செய்திகள் அவரது கவனத்தை ஈர்த்திருந்தது; அதைப் படித்துக் கொண்டிருக்கையில் ஏட்ரிய னிடமிருந்து அழைப்பு வந்தது.      
 
ஒன்று, கடந்த சில வருடங்களில் 200-க்கும் மேற்பட்ட பிரபல நபர் களுடன் – விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், கொண்டாடப் படுபவர்கள் – படுக்கையைப் பகிர்ந்துகொண்டதாகச் சொல்லும் நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு `ஹூக்கர்’ பற்றிய செய்தி.

இரண்டாவதாக, ரோட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரின் டெல் லேப்டாப் பேட்டரி வெடித்ததில் அவருடைய பேன்ட் தீப்பற்றிக் கொண்ட செய்தி.

மும்பை

இண்டீஸ்கேப்பின் டவுன்ஸ்விலே மூலம் வரக்கூடிய வருமானம் லேசாகக் குறைய ஆரம்பித்தது. வருண் அதை மிகவும் நெருக்கமாகக் கவனித்துக்கொண்டிருந்தான்.

கேள்விகள் கேட்கப்படுவதற்குமுன்பாகவே அனைத்துக்கும் பதில் வைத்திருந்தான்.  ஆதித்யாவிடம் சென்று அவன், “டாட், நம்முடைய கேமிங் புரோக்ராமின் புதிய அப்டேட்டை ஃபேஸ்புக்கிலும், மொபைல் தளத்திலும் ரிலீஸ் செய்யப் போகிறோம்” என்றான்.

‘`அது ஏன்?”

‘`நம்முடைய விளையாட்டு ஃபேஸ்புக்கில் வைரல் ஆவது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விளையாடுபவர் ஒவ்வொரு முறையும் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்லும்போது, புதிதாக அபார்ட்மென்ட் வாங்கும் போது அல்லது புதிதாக ஹோட்டல் ஒன்றைக் கட்டும்போது, அது ஃபேஸ்புக்கில் பதிவிடப்படுவதுடன், அவருடைய நண்பர்களின் நியூஸ் ஃபீடிலும் ஒரு பகுதியாகிவிடும்.

 இதனால் நாம் பிரபலமானாலும், நியூஸ் ஃபீடில் செயலிகள் மூலம் அதிகமான பதிவுகள் வந்து அதை நிறைத்துவிடுகின்றன என ஃபேஸ்புக் பயனாளர்கள் புகார் செய்ததால், ஃபேஸ்புக் அதன் அல்காரிதமில் சில மாறுதல்களைச் செய்தது. விளைவு, நியூஸ் ஃபீடில் விளையாட்டு சம்பந்தமான பதிவுகளுக்கு இப்போது குறைவான முன்னுரிமை தரப்படுகிறது. எனவே, நம் விளையாட்டை விளையாடுபவர்களின் நண்பர்கள் நம்முடைய விளையாட்டைப் பற்றியத் தகவலை பார்க்காமலே கூட இருக்கக்கூடும்.”

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37

‘`ஃபேஸ்புக்குக்கு இந்த ஆண்டு நாம் 25 மில்லியன் டாலரும், இனிவரும் ஆண்டுகளுக்கு அதிகமாகத் தருவதாகவும் உறுதி யளித்திருக்கிறோமே!” என்றார் ஆதித்யா.

‘`ஆமாம். இதில் பெரும்பகுதி வருமானம் விளையாட்டிலிருந்து வரும். இதுவரையில் நாம் விளையாட்டுக்கு சீட்ஸ், நிலைமாற்றம், கேம் காயின்ஸ்… எனக் குறைவாகவே விலை வைத்திருந்தோம். இப்போது நாம் அதையெல்லாம் ஒரு நியாயமான நிலைக்குக் கொண்டுவர இருக்கிறோம். இந்த அப்டேட்டின் மூலமாக நமது வருமானம் அதிகரிக்கும் என நம்புகிறேன். அத்துடன் நமது மொபைல் செயலி இப்போது பணம் செலுத்தி பெறக்கூடிய செயலியாகும். அதிலிருந்தும் இப்போது வருமானம் வர ஆரம்பித்திருக்கிறது” என்றான்.

‘`கிரேட். வெல் டன், சன்!” என்று ஆதித்யா பாராட்டினார்.

“குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது வருமானம் குறித்த தகவல்களை எனக்குக் கொடு” என்றார்.

‘`கண்டிப்பாக டாட். நீங்கள் வீட்டுக்குப் போகவில்லையா?”

‘` இல்லை! ரெவின்யூ இன்டெலிஜென்ஸிலிருந்து வந்திருக்கும் கேள்விக்கு நான் பதில் அனுப்ப வேண்டும். இன்னும் சிறிது நேரம் ஆகலாம். சந்தீப் அது சம்பந்தமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். இன்றிரவுக்குள் அதை அனுப்ப வேண்டும்.”

‘`கூல். எனது டீம் இங்கிருக்கிறது. அவர்கள் அப்டேட்டை தரவேற்றம் செய்தபின் நான் செல்ல வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே தனது கடிகாரத்தைப் பார்த்தான்.

அவன் மகிழ்ச்சியாக இல்லாததுபோல ஆதித்யா வுக்குத் தோன்றியதால் “உன்னை ஏதாவது தொந்தரவு செய்கிறதா?” என்று கேட்டார்.

‘`நத்திங் டாட். இப்போது மணி 6.30தான் ஆகிறது. கேமிங் சர்வரை 9.30 மணிக்கு அப்லோட் செய்ய முடியும். அதுவரை நான் காத்திருக்க வேண்டும்.”

‘`என்னிடம் விட்டுவிடு. நான் இங்கிருந்து லாக்-இன் செய்து அப்லோட் செய்ய அனுமதி தந்து விடுகிறேன்.”

வருணின் கண்களில் பிரகாசம். “நான் புரோக்ராமை சந்தீப் அங்கிளிடம் கொடுக்குமாறு என் டீமிடம் சொல்கிறேன். அவர் உங்களுக்கு இதில் உதவுவார். அதைச் செய்ய இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகாது.  நம் திட்டமிடப்பட்ட டவுன் டைம் இந்திய நேரப்படி இரவு 9.30-லிருந்து 11 மணி வரை.”

வருண் தான்யாவைச் சந்திக்கப் புறப்பட்டான்.

அன்று நடந்த அனைத்தையும் அவளிடம் சொன்னதுடன், ஆதித்யாவிடம் அப்லோட் செய்யும் வேலையைக் கொடுத்துவிட்டு வந்திருப்பதையும் சொன்னான். அதைக் கேட்ட தான்யா சிரித்தாள்.

 “அவர் மிகவும் இனிமையானவர். அவருடைய நல்ல குணத்தை நீ உனக்கு சாதகமாக்கிக் கொள்ளாதே” என்றாள்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37

‘`யெஸ், இண்டீட். அவரிடமிருந்து அதிக நேரம் பிரிந்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன்’’. அவன் தான்யாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தான். பதினொரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

“உனக்கு ட்ரைவிங் போக மூட் இருந்தால் நாம் அலுவலகத்துக்குப் போய் எல்லாம் நடந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்திடலாம்” என்றான்.

 வருணும், தான்யாவும் அலுவலகத்தை அடைந்த போது ஆதித்யா அங்கிருந் தார். “உங்களிருவருக்கும் ஆபிஸ்லதான் டேட்டிங்கா!”

‘`நோ அங்கிள். உங்களைத் தனியா விட்டுட்டு வந்துட்டேன்னு வருண் ரொம்ப ஃபீல் பண்ணினதுனால நாங்க திரும்பி வந்திருக்கோம்” என்றாள்.

ஆதித்யா சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பத் தயாரானார்.

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

ஓவியங்கள்: ராஜன்