Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39

ஓவியங்கள்: ராஜன்

பிரீமியம் ஸ்டோரி

நான் நாட்டை விட்டு வெளியே மூன்று நாள்கள் விடுமுறைக்காகச்  சென்றாலும் அது வேலைபோலத் தோன்றுவதோடு இங்கேயும் என்னை நீங்கள் பின் தொடர்கிறீர்கள்!” என்று லைனில் வந்த மைக் ஹென்ட்ரிக்ஸ் புகார் செய்தார். அவர் உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்பாக டேவோஸ் சென்றிந்தார்.

வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு ஏட்ரியன் நேராக விஷயத்துக்கு வந்தார். அவர் டோனியின் லண்டன் பயணம் குறித்து சுருக்கமாகக் கூறினார். “நமது களப் பணியாளர்கள் க்ளோரியாவின் உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அதுகுறித்து வேறு `கதை’ ஏதாவது இருக்குமா என நினைக்க வேண்டியிருக்கிறது. நேற்றிரவு, பான் அமெரிக்கன் இன்ஷூரன்ஸில் என் தொடர்பில் இருப்பவர்களை அழைத்து பேசியபோது நான் அதிர்ச்சியடைந்தேன்...” எனச் சொல்லிவிட்டு நிறுத்தினார். மறுமுனை யிலிருந்து எந்தவிதமான மறுமொழியும் இல்லை.

அதன்பின், “கோ ஆன், ஏட்ரியன். நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.”

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39

“1988-ம் ஆண்டு நடந்த எல் அல் பேரழிவில் இறந்த 29 குடும்பங்களுக்கு தலா அரை மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையாக பான் அமெரிக்கன் இன்ஷூரன்ஸ் கொடுத்தி ருக்கிறது. க்ளோரியாவின் உண்மையான பெற்றோர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் உறவினர் ஒவ்வொருவருக்கும் 1.5 மில்லியன் டாலர் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

“பான் அமெரிக்கன் இன்ஷூரன்ஸுடன் ஏதாவது டீல் இருக்கக்கூடும்’ எனச் சிறிதும் பதற்றப்படாமல் மைக் கூறினார்.

“நேற்றிரவு வேறெதையும் கண்டு பிடிக்காதபட்சத்தில் நாங்களும் அப்படித்தான் நினைத்திருப்போம். இதில் ஏதோவொரு விஷயம் இருக்கிறது மைக்,” என்று டான் இடையில் குறுக்கிட்டு நேற்றிரவு நான் ஃபெடரலின் டேடாபேஸைப் பார்க்க நேரிட்டது” எனக் கூறினார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39

`நீங்கள் பார்த்தீர்களா?”

`ஆமாம். நான் பார்த்தேன். நான் `Combined DNA system’-த்தைப் பார்த்தபோது க்ளோரியா டானின் டிஎன்ஏ என் கண்ணில்பட்டது.  Combined DNA Index System (CODIS) என்பது ஒரு தடயவியல் அறிவியலும், கணினித் தொழில் நுட்பமும் இணைந்த ஒரு மென்பொருள் தளம் ஆகும். இது அமெரிக்காவிலிருக்கும் 50 மாநிலங் களைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட நபர்களின்  குற்றவாளிகள், கைதிகள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்கள் – டிஎன்ஏ விவரங்களைக் கொண்டதாகும். டிஎன்ஏ விவரங் களைத் தேடுவதற்கும், பொருத்திப் பார்ப்பதற்கும் இது புலன் விசாரணை செய்வதை அனுமதிப்பதால் குற்றங்களுக்குத் தீர்வு காண உதவுகிறது.

“இதில் ஏன் உங்களுக்கு ஆர்வம்?” மைக் ஹென்ரிக்ஸ் கேட்டார்.

“முதலாவதாக, வழக்கமான காப்பீடு நஷ்ட ஈட்டைவிட மூன்று மடங்கு அதிகமாகக் கொடுக்கப் பட்டிருப்பது புருவத்தை உயர்த்த வைத்தது. இரண்டாவதாக, க்ளோரியாவின் கூற்றுப்படி, பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகு நடந்த விருந்தின்போது அவர் சந்தேகத்தின் பேரில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவள் காவலில் வைக்கப்பட்டாள் என்பது   பற்றி காவல்துறை பதிவேட்டில் செய்தி எதுவும் இல்லை என்பதை அறிந்தபோது எனது சுவாரஸ்யம் அதிகமானது. ஜிலியன் அவளைப் பாதுகாத்தாரா என்பது குறித்துத் தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன்” என்றார்.

“அப்படி அவர் செய்திருந்தால் அது வழக்கம்தானே, இல்லையா?” என மைக் பதில ளித்தார். “அப்பா என்கிற நிலையில் அவர் அதைத்தான் செய்திருப்பார்.”

“ஓகே?”

“க்ளோரியாவின் டிஎன்ஏ விரல்ரேகைப் பதிவை `நேஷனல் டிஎன்ஏ பதிவக’த்தில், NDIS,   கண்டுபிடித்தோம் என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?”

“அங்கே எப்படி அது கிடைத்தது, டான்?”

“தண்டிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், இல்லையென்றாலும் கைது செய்யப்பட்டவர்கள், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களின் டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரிப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விருந்தின்போது க்ளோரியா சுற்றி வளைக்கப்பட்டு, அவள் பெயிலில் வருவதற்கு முன்பாக, இது சேகரிக்கப் பட்டிருக்கப்பட்ட பின்னர் காவல்துறை பதிவேட்டிலிருந்து இந்த சம்பவம் நீக்கப்பட்டி ருக்கலாம். காவல்துறை பதிவேட்டிலிருந்து இந்த சம்பவம் குறித்த நிகழ்வை அழித்த நபர் டிஎன்ஏ மாதிரி ஏற்கெனவே சேகரிக்கப்பட்டுவிட்டது என்கிற உண்மையைத் தவறவிட்டிருக்க வேண்டும்.”

“நீங்கள் எனக்குத் தலைப்புச் செய்தி கொடுப்பது அவசியம், டான். அவசரமாக இப்போது போக வேண்டும், நேரம் அதிகமில்லை.”

“மன்னிக்கவும், மைக். இதை வேகமாக முடிக்க முயல்கிறேன். க்ளோரியாவின் டிஎன்ஏ டேட்டாபேஸில் உள்ள வேறு யாருடைய டிஎன்ஏ-வுடனாவது பொருந்துகிறதா என்று பார்த்தோம். இன்று காலையில் அதற்கான அறிக்கை கிடைத்தது, மைக்.”

“அது பொருந்தியது” மைக் பதிலளித்தார்.

இது கேள்வியல்ல. ஆனால், ஓர் அறிக்கை என்று டான் அதைத் தெளிவுபடுத்தினார்.

“ஆமாம், மைக். ஒரு பொருத்தம்தான். ஆனால் மிகவும் உறுதியானது. உங்களுக்குத் தெரியும், இல்லையா?”

டான் கூறிய இந்த விஷயத்தைக்கேட்டு ஏட்ரியன் அதிர்ச்சியடைந்தார். டான் இதை அவரிடம் கூறியிருக்கக்கூடாது.”

“ஆமாம், டான். `க்ளோரியா நிக்கியின் மகள், நிக்கிக்கும் எனக்கும்” என்று மைக் பதில் கூறினார்.

“உண்மை கற்பனையைவிட விநோதமானது!” டோனிக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

மைக் இதை விவரித்தார்... “அவள் இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தபோது நாங்கள் லண்டனில் சந்தித்தோம், காதல் வயப்பட்டோம். அந்த நேரத்தில் தான் க்ளோரியா பிறந்தாள். ஆனால், காலப்போக்கில் எங்களுடைய ஆர்வம், குறிக்கோள் எல்லாம் வெவ்வேறாக இருப்பதை உணர்ந்ததால் நானும் நிக்கியும் பிரிந்துவிட்டோம். வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கும். குறுகிய கால காதலுக்குப் பிறகு அவள் ஜிலியனைத் திருமணம் செய்து கொண்டபோது பழைய விஷயங்கள் எதையும் அவள் அவரிடம் கூறாமல் மறைத்துவிட்டாள்.

ஜிலியன் அவளுடைய குழந்தையை ஏற்றுக் கொள்ள மாட்டார் என அவள் திடமாக நம்பினாள். அந்த நேரத்தில் அரசியல் ரீதியில் அவருக்கு எதிராக இருந்தேன். ஆனால், அவளோ தாய்மைக்கே உள்ள அழுத்தத்தில் இந்த விஷயத்தை ஜிலியனிடம் கூறினாள். அவர் தயங்கினாலும் அதன்பின் தன் குழந்தையாக ஏற்றுக்கொண்டார். இந்தப் பின்னணிக்கு நம்பகத் தன்மை கொடுக்கும் வகையில் எல் அல் பேரழிவின்போது மூன்று வயதுக் குழந்தை அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்ததாகப் புனையப்பட்டது. பேரழிவில் இழந்த பெற்றோர்களில் ஒருவரின் குழந்தை க்ளோரியா என உலகுக்குத் தெரியப்படுத்தப் பட்டாள். அந்தக் குடும்பத்தினரின் `வாயை அடைக்க’ அவர்களுக்கு பான் – அமெரிக்கன் காப்பீடு வழியாகப் பணம் வழங்கப்பட்டது. நீங்கள் இந்த விஷயத்தில் தலையிடும் வரை யாரும் இதைப் பற்றிக் கவலைப்பட வில்லை. நான் உயர்ந்த விவேகத்தை உங்களிட மிருந்து எதிர்பார்க்கிறேன்.”

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39

“அப்படியெனில் நிக்கி மற்றும் க்ளோரியாவின் லண்டன் பயணம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?”

`நிக்கியும், நானும் அதிகமாகச் சந்தித்துக்கொள்வதில்லை. ஆனால், க்ளோரியா எனக்கும் மகள்தானே. என்னைச் சந்திப்பதற்காக நிக்கி க்ளோரியாவை லண்டனுக்கு அழைத்து வந்ததோடு அவளுக்கு ஆலோசகராகவும் சில பொழுதுகளைச் செலவழித்தேன்.”

“க்ளோரியாவுக்கு நீங்கள்தான் அவளுடைய உயிரியல்ரீதியான தந்தை என்று தெரியுமா?”

“ஆமாம்”

“அப்படியென்றால் அவள் ஏன் எங்களிடம் பொய் செல்ல வேண்டும்?”

“அவளுடைய பெற்றோர்களைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்ல வேண்டுமென்று அவளுக்குச் சொல்லப்பட்டிருந்தது. எனவே, அவள் என்ன சொல்லவேண்டுமோ அதைத்தான் உங்களிடம் சொல்லியிருக்கிறாள். இதில் ஆச்சர்யமெதுவுமில்லை.”

“காரணத்தை இது விளக்குகிறது என ஏட்ரியன் ஊகித்தாலும், அவரை இது முழுவதுமாகச் சமாதானப்படுத்தவில்லை. ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்தது. நிக்கி கண்காணிப்பின் கீழ் இருக்கிறார் எனும்போது ஏன் ஏடிஎம் கொள்ளையைத் அவர் திட்டமிட வேண்டும்?”

“அவர் இந்தமாதிரியான காரியங்களுக்கு மாஸ்டர் மைண்டாக இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா? உலகளாவிய கொள்ளை? இந்த விஷயம் எனக்கு உறுதியாகப்படவில்லை, ஏஜென்ட் ஸ்காட். அவர் கோமாவில் இருந்து எழுந்தபிறகு நாம் இதுபற்றிக் கேட்கலாம். அதுவரை நாம் கொஞ்சம் எச்சரிக்கை யாகச் செயல்பட வேண்டும்.”

ஏட்ரியன் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்த பிரச்னைக்குச் சென்றார்.

“ஜிலியன் டான் கொலைக்கும் காட்டன் ட்ரையிலுக்கும் பொதுவாக வலுவான சாத்தியக்கூறு இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே, அதுவரை இந்த வழக்கில் அவர் கண்டறிந்தவற்றை விளக்கிக் கொண்டிருந்தார்.

“என்னிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை?’ என மைக் கேட்டார்.

“இந்தியாவுக்குச் செல்வதற்கான அனுமதி. நாம் புலன் விசாரணை செய்வதற்கான அனுமதியைப் பெறுவதற்கு இந்திய வெளியுறவுத் துறையோடு மறைமுகமாகத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நமக்கு இந்திய சைபர் பிரிவின் உதவி தேவை.”

“ஏன் இந்தியா?”

“ஏனென்றால், ஆல்டாயிட்ஸின் சமீபத்திய லாக்-இன் மும்பையிலிருந்து செய்யப்பட்டிருக்கிறது” என ஏட்ரியன் விளக்க மைக் `க்ராண்டட்’ என்றார்.

அழைப்பைத் துண்டித்தபின் ஏட்ரியன் டானைப் பார்த்தார். “எப்படி மைக் ஹென்ரிக்ஸின் டிஎன்ஏ அந்த டேட்டாபேஸில் இடம்பெற்றது. அவருக்கு ஏதாவது கிரிமினல் பின்னணி இருக்கிறதா?” அதோடு டான் ஏன் இதைத் தன்னிடம் சொல்லவில்லை எனக் கேட்கவும் விரும்பினார். ஆனால், கேட்கவில்லை. டானுடன் விவாதத்தில் ஈடுபடுவதில் எந்தவித பயனும் இல்லை.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39

“எனக்குத் தெரியவில்லை” – டான்.

“அப்படியென்றால் என்ன அர்த்தம்?”

`இந்த நிலையில் இருக்கும் அரசியல்வாதிகள், அவர்களுடைய வாழ்க்கையில் இதுபோல சில காலகட்டங்களில் தடுப்புக் காவலில் வைக்கப் படுவதுண்டு. அப்போது சட்டத்தை அமல் படுத்துபவர்கள் அவர்களின் டிஎன்ஏ மாதிரி களைச் சேகரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டுவார்கள், அப்படியாக மைக்கின் டிஎன்ஏ-வும் டேட்டா பேஸில் பதிவாயிருக்கும் என நான் நம்புகிறேன்.”

“எனக்குப் புரியவில்லை”

“ஜனாதிபதியினுடைய தகவலை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக மைக் ஹென்ரிக்ஸ் உங்களை அழைத்தபோதே ஏதோவொன்று சரியாக இல்லை என எனக்குத் தோன்றியது. ஆனாலும், அதைச் சொல்ல முடியவில்லை. க்ளோரியாவின் பின்னணியில் ஏதோவொன்று சரியில்லை எனத் தோன்றியது. காப்பீடு வழங்கியது அதன் உச்சம். மைக் ஹென்ரிக்ஸுக்கு அவரது டிஎன்ஏ டேட்டாபேஸில் இருக்கிறது என்பது தெரியும். அவர் தந்தை என்பதால் க்ளோரியாவுடையது அவருடையதுடன் பொருந்திப் போகும் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், பாதுகாப்புச்  செயலாளர் என்கிற நிலைக்குக் கீழே உள்ளவர்களாலும் இந்த டேட்டாபேஸை அணுக முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இவர் அரசியலுக்கு முற்றிலும் புதியவர் என்பதால் உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று.”

“நீங்கள் அவரிடம் பொய் சொன்னீர்களா?”

“பிங்க் எலிஃபென்ட்டை (ஏதாவதொன்று நன்கு தெரிந்திருந்தும் அதைச் சொல்ல முடியாமல் இருக்கும் நிலை) பிடிப்பதற்கு அப்பட் டமான பொய் சொல்வதென்பது ஏற்புடையதாகும். இல்லையா, ஏட்ரியன்? டான் சிரித்தார். “மிகவும் அடிப்படையானது, மை டியர், ஸ்காட், மிகவும் அடிப்படையானது.”

 (பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு