Published:Updated:

மியூச்சுவல் ஃபண்டுகள் ஆபத்தானவையா?

மியூச்சுவல் ஃபண்டுகள் ஆபத்தானவையா?
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்டுகள் ஆபத்தானவையா?

சேமிப்பு ஸ்பெஷல்

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நாம் ஏன் தயங்குகிறோம். `ரிஸ்க்’ என்பதைத்தவிர வேறென்ன காரணமிருக்கிறது. விளம்பரங் களிலேயே சொல்கிறார்களே... உண்மையில், எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் `சந்தை அபாயம்’ கொண்டவை அல்ல! 

மியூச்சுவல் ஃபண்டுகள் ஆபத்தானவையா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எடுத்துக் கொண்டால், நாம் கொடுக்கும் பணத்தைக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஃபண்டுகள். இவை இரண்டும் கலந்த ஹைபிரீட் ஃபண்டுகள் என முக்கியமான வகைகள் உண்டு. இந்த வகைகளை அறிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியம்.

இவற்றில், ஹைபிரீட் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் மட்டுமே திரட்டப்படும் நிதியை, நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய் கின்றன. எனவே, இந்த ஃபண்டுகளில் லாபமும் அதிகம், அபாயமும் அதிகம். மற்ற வகைப் பங்குகளில் லாபமும் குறைவு, ரிஸ்க்கும் குறைவு!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மிக முக்கியம். ‘நம்மால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்?’ என்பதைத் தெளிவாகத் தீர்மானிப்பது தான்!

‘வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...’ என்று வடிவேலு சொல்வாரே... அதுபோல மியூச்சுவல் ஃபண்டில் வரலாறுதான் மிக முக்கியமானது. அதாவது முதலீடு ஒரு ஃபண்ட், கடந்த காலங்களில் எப்படி லாபம் பார்த்திருக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மியூச்சுவல் ஃபண்டுகள் ஆபத்தானவையா?

அந்தக் குறிப்பிட்ட ஃபண்டை வழி நடத்தும் தளபதியான `ஃபண்ட் மேனேஜர்’ அதற்கு முன்பு நிர்வகித்த ஃபண்டுகள் நல்ல லாபம் கொடுத்திருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். அந்த ஃபண்டுகள் லாபம் தந்திருந்தால், இப்போது நிர்வகிக்கிற ஃபண்டும் லாபம் கொடுக்கும் என ஓரளவு நம்பலாம்.

பங்குச் சந்தை சார்ந்த பல ஃபண்டுகள் 10, 15, 20, 25 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவற்றை, தயங்காமல் முதலீடு செய்யத் தேர்வு செய்யலாம். இதன்மூலம் ரிஸ்க்கைக் குறைக்கலாம்.

முதலீட்டாளர் ஒருவரின் ரிஸ்க் திறனுக்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்டுகளை கீழ்க்காணுமாறு பிரிக்கலாம்.

ரிஸ்க் தவிர்ப்பவர்களுக்கு..!  
                             
1. லிக்விட் ஃபண்டுகள்

2. இன்கம் ஃபண்டுகள்

3 அல்ட்ரா ஷார்ட் டெர்ம் 
 
ஓரளவுக்கு ரிஸ்க் எடுப்பவர்களுக்கு

1.
ஹைபிரீட் ஃபண்டுகள்

2. வருமான வரிச் சேமிப்பு ஃபண்டுகள்

அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு...!

1. மல்டி கேப் ஃபண்டுகள்

2. லார்ஜ் கேப் ஃபண்டுகள்  
                        
3. மிட் கேப்  அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள்

4. ஸ்மால் கேப் ஃபண்டுகள்

5. செக்டோரல் ஃபண்டுகள்

இவற்றையெல்லாம் கவனித்து முதலீடு செய்தால் நிச்சயம் உங்கள் பணம் பத்திரமாகவே இருக்கும்!

வ.நாகப்பன்