Published:Updated:

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

Published:Updated:
‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

ஜா புயலால் சிதைந்து கிடக்கிற தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், வாசகர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்போடு விகடன் களப்பணியாற்றிவருகிறது.  

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கும் நிலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் துயரத்தில் தவித்த தென்னை விவசாயிகளுக்காகப் பட்டுக்கோட்டை, பேராவூரணிப் பகுதிகளில் வேளாண் நிபுணர்களைக் கொண்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆத்திக்கோட்டை கிராமத்தில் பவானி என்பவரது தோப்பிலும், பேராவூரணி அருகே உள்ள தென்னங்குடியில் சோம.சிவக்குமார் என்பவரது தோப்பிலும் இரண்டு நாள்கள் நடத்தப்பட்ட செயல்முறைப் பயிற்சி முகாம்களில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றார்கள். குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும் பேராசிரியருமான செந்தூர்குமரன், பாதித்த தென்னை மரங்களைக் காப்பாற்றும் வழிமுறைகள், சாய்ந்த குருத்துகளை மீட்டெடுக்கும் தொழில்நுட்பங்கள், வீழ்ந்து கிடக்கும் மட்டைகளை உரமாக்கும் முறைகள் குறித்து எளிய முறையில் செயல்முறைப் பயிற்சி அளித்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  கணேஷ், “கருகும் பயிர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் இறைத்துத் தந்தால் உதவியாக இருக்கும்” என்றார். உடனடியாக விகடன் குழுவினர் களத்தில் இறங்கினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், செட்டிக்காடு, கரம்பக்காடு, நெடுவாசல், கம்மங்காடு, காயக்காடு, மாந்தாங்குடி, அணவயல் எல்.என்.புரம் ஆகிய கிராமங்களில் வாடிநின்ற 134 ஏக்கர் நெல், காய்கறிப் பயிர்கள் ஜெனரேட்டர் மூலம் நீரிறைத்துக் காப்பாற்றப்பட்டன. 16 நாள்கள் இந்தப்பணி நடந்தது. 

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி அருகே அழியாநிலையில் இருக்கிறது இலங்கை அகதிகள் முகாம். 1990-ல் தமிழகத்துக்கு வந்தவர்கள், 40 ஆண்டுக்கால வாழ்க்கையில் அனுபவிக்காத கடுந்துயரத்தை கஜா ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முகாமைச் சீரமைக்கும் பணியை விகடன்  கையில் எடுத்தது. சிமென்ட் சீட், ஓடுகள் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட வீடுகள் புனரமைக்கப்பட்டன. 

புயல் பாதித்து ஒரு மாதம் கடந்தும்கூட  தென்னை மரங்களைத் தோப்பிலிருந்து அகற்றும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டி ருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது விகடன். 

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

இந்தப் பணிக்காக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகிலிருக்கிற ஆண்டிக்காடு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிக்காடு, உதயமுடையான்,  எட்டிவயல் ஆகிய கிராமங்களில் இரண்டு ஏக்கருக்குள் தென்னந்தோப்பு வைத்துள்ள 31  சிறு, குறு விவசாயிகளின் 40 ஏக்கர் தென்னந்தோப்புகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!முதற்கட்டமாக, விழுந்துகிடக்கும் தென்னைகளை வெட்டி அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெட்டிச் சேகரிப்படும் தென்னை மரங்களை விற்பனை செய்து, அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வழங்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்னந்தோப்புகளை சுத்தம் செய்வதோடு, ஒவ்வொரு தோப்பிலும் உரக்குழிகள் அமைத்து பாரம்பர்ய வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்க விவசாயிகளுக்கு நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், அந்தப் பகுதியின் தட்பவெப்பத்துக்குத் தகுந்த நாட்டுத் தென்னங்கன்றுகள் நடும் பணியும் நடக்கவுள்ளது. கூடவே, தென்னங்கன்றுகளுக்கு மத்தியில், நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் ஊடுபயிர் சாகுபடி செய்வதற்கான உதவிகளையும் விகடன் மேற்கொள்ளவிருக்கிறது.

நேற்றுவரை நமக்காக நிலத்தில் நின்ற மக்களுக்காகக் களத்தில் கைகோப்போம்  வாருங்கள்!

விகடன் டீம் - படங்கள்: தே.தீட்ஷித், ம.அரவிந்த், ஆர்.வெங்கடேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism