நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரியல் எஸ்டேட்... குறுகிய கால முதலீட்டுக்குக் கைகொடுக்குமா?

ரியல் எஸ்டேட்... குறுகிய கால முதலீட்டுக்குக் கைகொடுக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ரியல் எஸ்டேட்... குறுகிய கால முதலீட்டுக்குக் கைகொடுக்குமா?

ரியல் எஸ்டேட்... குறுகிய கால முதலீட்டுக்குக் கைகொடுக்குமா?

துரையைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வுபெற்றார். அப்போது அவருக்கு ரூ.15 லட்சம் கிடைத்தது. புதிதாகப் போடப்பட்ட மனைப் பிரிவில், தான் இரண்டு மனை வாங்க இருப்பதாகவும், அப்படி வாங்கினால் பிற்பாடு நல்ல விலைக்கு விற்கலாம் என்றும் நண்பர் ஒருவர் ஆசை காட்டவே, குமாரசாமியும் உடனே மொத்தப் பணத்தையும் போட்டு மனை ஒன்றை வாங்கிப்போட்டார்.

அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் மகளின் திருமணத்துக்குப் பணம் தேவைப் படும் நிலையில், தான் செய்தது தவறு என்பதை பிறகுதான் அவர் உணர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று சதவிகிதம்கூட விலை ஏறாத தன் மனையை, மகள் திருமணச் செலவுகளுக்காக விற்றார். 

ரியல் எஸ்டேட்... குறுகிய கால முதலீட்டுக்குக் கைகொடுக்குமா?

எப்போதுமே மனை, வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு, பண்ணை வீடுகள் போன்ற ரியல் எஸ்டேட் சொத்துகளை முதலீடாகப் பார்ப்பவர்கள் குமாரசாமியைப்போல் குறுகிய கால நோக்கத்துடன் நுழைவதைத் தவிர்க்க வேண்டியது மிக அவசியம். பொதுவாக, ரியல் எஸ்டேட் முதலீட்டில் நல்ல லாபம் பார்க்கக் குறைந்தது எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இன்னொரு முக்கிய விஷயமும் இருக்கிறது. ரியல் எஸ்டேட் சொத்தைப் பொறுத்த வரையில், சொத்தை முழு உரிமை ஆக்கிக் கொள்ள, சொத்தின் அரசு வழிகாட்டி மதிப்பில் 8% (7% முத்திரைக் கட்டணம், 1% பதிவுக் கட்டணம்), தரகுக் கட்டணம் 2% செலவாகிவிடும். சொத்தின் விலை 10% அதிகரிக்கும்பட்சத்தில், இந்தச் செலவு களுக்கே இந்த அதிகரிப்பு சரியாக இருக்கும். இதையும் தாண்டி, பணவீக்க விகிதம் சேர்க்கப்பட்டு சொத்தின் விலை ஆண்டுக்குக் குறைந்தது 25%, 30% வரை அதிகரித்தால்தான் லாபமாக இருக்கும். ரியல் எஸ்டேட் முதலீட்டில் ஈடுபடுகிறவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்வது நல்லது. 

-சி.சரவணன்