பணம் பற்றி பலரும் பலரிடம் பேசுவதில்லை. காரணம், கடன் கேட்டுவிடுவார்களோ என்கிற பயம்தான். நம்மிடம் இருக்கும் பணத்தை பிறரிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்றாலும், குடும்ப உறுப்பினர்களிடம் ஒளிவுமறைவு இல்லாமல் பேச வேண்டியது அவசியம். குடும்பம் சார்ந்த விஷயங்களைக் குடும்பத்தின் பிற உறுப்பினர்களுடன் கலந்துபேசுவதுபோல, பணம் சார்ந்த விஷயங்களையும் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துபேசுவது அவசியம்.

ஏன் பேச வேண்டும்?

“பணம் சார்ந்த விஷயங்களைப் பேசினாலும், அது என் மனைவிக்குப் புரிவ தில்லை, பிள்ளைகளிடம் பண விஷயங் களைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என ஏதேதோ காரணங்களைச் சொல்லி, குடும்ப உறுப்பினர்களுடனான உரையாடல்களைத் தட்டிக் கழிக்கிறோம். அப்படியே பேசுவதற்கு நேரம் இருந்தாலும், வீட்டின் குடும்பத் தலைவர், குடும்பப் பொருளாதார விஷயங்களைக் கவனித்துக்கொள்வார் என்று மனைவியும், பணப் பிரச்னைகளை அப்பா பார்த்துக்கொள்வார் என்று பிள்ளைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது நம் பெரும்பாலான குடும்பங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்படியிருக்கும்போது குடும்பத் தலைவருக்குத் திடீரென அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், மொத்தக் குடும்பமும் பொருளாதார ரீதியான பாதிப்பினைச் சந்திக்க நேரிடும். அவர் மேற்கொண்டிருந்த பண நிர்வாகத்தில் எண்ணற்ற குழப்பங்களைக் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க நேரிடும். அதனால் மற்ற விஷயங்களைப் பேசுவதுபோல, பணம் சார்ந்த விஷயங்களையும் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுங்கள்.

கடன் பற்றி பேசுங்கள்

குடும்ப உறுப்பினர்களுடன் அவசியம் பேச வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது, கடன். இந்திய நாட்டின் மொத்தக் கடன் எவ்வளவு எனத் தெரிந்து வைத்திருப்பதைவிட, அவரவர்களின் குடும்பத்தின் மீதான கடன் எவ்வளவு என்பதைத் தெரிந்துவைத்திருப்பது முக்கியம். எதற்காகக் கடன் வாங்கினோம், யாரிடமிருந்து கடன் வாங்கினோம், கடன் தொகை எவ்வளவு, எந்தக் கடனை முதலில் அடைப்பது எனக் கடன் சார்ந்த உரையாடல்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் அவ்வப்போது இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

கடனை வாங்குவதைப் பகிர்ந்துகொள்வது போல, பிறருக்குக் கடன் கொடுத்த விவரங் களையும் பகிர்ந்துகொள்வதில் கவனம் அவசியம். வீடு கட்ட வாங்கிய கடன், கிரெடிட் கார்டு கடன், கார் கடன், நண்பர்கள் மற்றும் உறவினர் களிடமிருந்து வாங்கிய கடன் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக டைரியில் எழுதிவைத்துக் கொண்டால் கூடுதல் சிறப்பு.

கலந்தாலோசிப்பதால் உண்டாகும் தெளிவு

“இன்றைய நிலையில் வீட்டு நடப்பை விட்டுவிட்டு, நாட்டு நடப்புகளைத்தான் மக்கள் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒரு குடும்பம் பொருளாதார ரீதியான சிக்கலைச் சந்திக்கும்போது திணறவேண்டிய நிலை உருவாகிறது. கணவனும் மனைவியும், பொருளா தார ரீதியாகக் கலந்து பேசி, அதில் தெளிவடைவது அவசியம். அப்போதுதான் எதிர்கால வாழ்க்கையைப் பொருளாதார ரீதியில் சரியாகவும், தெளிவாகவும் அணுக முடியும். அதிலுள்ள நிறைகுறைகளைப் புரிந்துகொள்ள முடியும்” என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன்.

இன்ஷூரன்ஸ் குறித்த விவரங்கள்

கிரி என்பவர் ரூ.3 லட்சத்திற்குத் தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருந்தார். ஆனால், அதை தன் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ சொல்லவில்லை. திடீரென்று ஏற்பட்ட கார் விபத்தினால், அவருக்கு ஒரு காலை எடுக்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. மூன்று நாள் தொடர் மயக்கத்தில் இருந்தவருக்கு, அவரின் மனைவியும், பிள்ளைகளும் அறுவை சிகிச்சைக்கான பணத்துக்குப்பட்ட கஷ்டம் பற்றி கண்விழித்ததும்தான் தெரியவந்தது. அதன்பிறகுதான், இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் விவரத்தை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதை முன்னரே பகிர்ந்திருந்தால், பணத்தைப் புரட்டுவதற்குச் சிரமப்பட்டிருக்கத் தேவையில்லை.

ஒருவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும்பட்சத்தில், அதைத் தயவு செய்து குடுப்ப உறுப்பினர்களிடம் தெரியப் படுத்துங்கள். அப்போதுதான் அவசரமான சந்தர்ப்பங்களில் அதைப் பயன்படுத்திப் பலன் அடைய முடியும்.

இன்ஷூரன்ஸ் பாலிசி தொடர்பான ஆவணங்களை அனைவருக்கும் தெரிகிற இடத்தில் வைப்பது நல்லது. திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்களின்போது, அதைத் தேடிக் கொண்டிருக்க முடியாது.

பட்ஜெட் மற்றும் முதலீடு

இன்று ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் படித்தவர்களாகவும், வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள். இருவருக்கும் பொருளாதார ரீதியான அறிவு இருக்கிறது. அதனால், வரவு செலவு விஷயங்களை கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.

முதலீடு சார்ந்த அறிவினை இருவரும் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆனால், பெரும்பாலானவர்கள் அதைச் செய்வதே இல்லை. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பிப்பதற்குமுன், அது சார்ந்த உரையாடலைக் குடும்ப உறுப்பினர்களுடன் நடத்துங்கள். அப்போதுதான் பல கோணங்களில் சிந்தித்துத் தெளிவான முடிவை எடுக்க முடியும். குடும்ப பட்ஜெட்டை வீட்டில் குடும்பத் தலைவர் மட்டுமே போடுவதைவிட, அனைவரும் சேர்ந்துபோடும்போது செலவு, சேமிப்பு என அனைத்திலும் குழப்பமில்லாமல் முடிவெடுக்க முடியும்.

வங்கிச் சேமிப்பு விவரங்கள்

ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதுபோல, பலரும் இரண்டுக்கு மேற்பட்ட வங்கிச் சேமிப்புக் கணக்கும் வைத்திருக்கிறார்கள். அதேபோல, வங்கி ஆர்.டி, எஃப்.டி என பல வங்கிக் கிளைகளில் வைத்திருக்கிறார்கள். அந்த விவரங்களைப் பெரும்பாலானவர்கள் பகிர்ந்து கொள்வதில்லை. வங்கியின் பெயர், வங்கி இருக்கும் இடம், சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகையின் அளவு என வங்கி சார்ந்த விவரங்களைக் குடும்பத்தில் யாராவது ஒருவரிடமாவது சொல்லிவைப்பது நல்லது. அப்படிப் பகிர்ந்துகொள்ளும்போது, அந்தச் சேமிப்புப் பணத்தை இந்த காரணங்களுக் காகத்தான் சேமித்து வைத்திருக்கிறேன் என்பதையும் அவரிடம் தெளிவுபடுத்துவது அவசியம்.

சொத்து குறித்த விவரங்கள்

தங்கம், நிலம், வீடு, அரசு பத்திரங்கள் மீதான முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என எல்லாமே சொத்துப் பட்டியலில்தான் சேரும். அதனால் அனைத்துச் சொத்து விவரங்களையும் கணவர் மனைவியிடம் அல்லது மனைவி கணவரிடம் பகிர்ந்துகொள்வது அவசியம்.

யாருக்கும் தெரியாமல் சொத்து சேர்த்து வைப்பதே சரி என்றும், அதுதான் கெளரவம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். நம் சேமிப்பு, முதலீடு குறித்த விஷயங்கள் வெளியில் இருப்பவர் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால், குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். இதுநாள் வரை நாம் அதைச் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, இன்றுமுதல் அதைச் செய்யத் தொடங்குவோம்!

செ.கார்த்திகேயன்