Published:Updated:

வேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்!

வேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
வேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்!

நா.சரவணகுமார், நிதி ஆலோசகர்

வேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்!

நா.சரவணகுமார், நிதி ஆலோசகர்

Published:Updated:
வேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
வேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்!

ன்றைய இளம் தலைமுறையினரிடம் ஒரே ஒரு விஷயத்தில் ஒருமித்த சிந்தனை இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அது, இளமையிலேயே ஓய்வுபெறுவது. 45, 50 வயதில் ஓய்வுபெற்று, வீட்டில் உட்கார்ந்துகொண்டு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். வெறும் சம்பளத்துக்கு மற்றவர்களுக்காக உழைக்காமல், தனது முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இளமையிலேயே ஓய்வு என்கிற முடிவினை எடுக்கத் தூண்டுகிறது. 

வேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்!

ஆனால், இந்த முடிவினை எடுத்து பிசினஸைத் தொடங்கும்முன் சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம். என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

கடனைக் குறைத்துக்கொள்ளுங்கள்

இன்று பெரும்பாலானவர்கள் தொழில்முனைவில் தோல்வியடைய காரணமாகச் சொல்லப்படுவது சரியான நிதித் திட்டமிடல் இல்லாததுதான். நாம் செல்லவேண்டிய இடத்திற்கான பயணச்சீட்டு, அவசரத் தேவைக்கான முன்பணம், முதலுதவிக்கான மருந்துகள், துணிமணிகள் மற்றும் பயண வழிகாட்டிகள் போன்றவற்றைத் திட்டமிட்டாலே நம் பயணம் சுகமானதாக இருக்கும்.

இதேபோல, நாம் வேலையிலிருந்து தொழில் முனைவுக்குச் செல்லும்முன், நமக்கான கடன்களைக் குறைப்பது மிகவும் நல்லது; அல்லது கடனை முழுவதுமாக அடைத்துவிட்டுத்தான் தொழில்முனைவு என்னும் புதிய பயணத்திற்குத் தயாராக வேண்டும்.

கடனை அடைக்கத் தொழில் செய்ய வருகிறேன் என்ற சிந்தனையுடன் தொழில் செய்ய வருவது சிறந்ததாக அமையாது. தொழிலை ஆரம்பித்தவுடன் வீடு, வாகனம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கப்போகிறேன் என்கிற சிந்தனையும் சரியான அணுகுமுறையல்ல.

சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகப்படுத்துங்கள்

‘நமக்குத்தான் கடன் ஏதுமில்லையே, அப்புறம் என்ன... ஒரு தொழிலை தொடங்க வேண்டியது தானே’ என முடிவெடுக்காதீர்கள். இதுவும் ஆழம் தெரியாமல் காலை விடுவதுபோலத்தான்.

தொழிலைத் தொடங்கும்முன், உங்கள் மற்றும் உங்களின் குடும்பத்திற்கான சேமிப்பு மற்றும் முதலீடு எவ்வாறு இருக்கிறது என்ற நிலவரத்தைக் கருத்தில்கொள்ளுங்கள்.

அவசரகால நிதியை (Emergency Fund) உருவாக்கத் தயாராகுங்கள். உங்களது குடும்பத்திற்குத் தேவையான மாதச் செலவுகள் போக, காப்பீடு, முதலீடு, வரிகள் ஆகியவற்றையும் செலவுகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அவசரகால நிதிக்கான தொகையை, சராசரியாக    18-24 மாதங்கள் மதிப்பு மடங்கில் இருக்குமாறு சேமித்துக்கொள்ளுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்!

அவசரகால நிதி என்பது உங்களுக்கும், உங்களின் குடும்பத்துக்கும் தொழில் செய்யும் காலத்தில் நிதி சார்ந்த பாதுகாப்பைத் தரும். அவசர கால நிதியிலிருந்து எந்த ஒரு சூழ்நிலை யிலும், உங்கள் தொழிலுக்குத் தேவையான முதலீட்டுத் தொகையை எடுக்க முயலாதீர்கள். நீங்கள் தொழிலுக்கான முதலீட்டைத் தனியாகச் சேமித்து வைத்திருப்பதே சிறந்தது.

உங்களுக்குப் பிடித்த விஷயத்தைத் தொழிலாக மாற்ற சிந்தியுங்கள்


புதிய தொழிலைத் தேர்ந்தெடுப்பது அல்லது தொழில்முனைவு என்பது இன்றைய கால கட்டத்தில் சவாலான காரியமே. இருப்பினும், வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் ஏற்கெனவே பார்த்துவந்த வேலையைத் தொழிலாக மாற்ற முயற்சி செய்யலாம். நீங்கள் கற்ற கல்வியைக்கொண்டும் தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். பொதுவாக, உங்களின் தினசரி நடவடிக்கைகளை (Regular Activities) கொண்டு தொழிலைத் தேர்ந்தெடுப்பது சாதகமாக அமையும்.

உங்களுக்கு ஒரு பொருளை விற்பனை செய்வது எளிதான காரியம் எனில், அதனைப் பற்றி சிந்திக்கலாம். எனக்கு நன்றாக எழுதவரும்; நான் மேடைகளில் நன்றாகப் பேசுவேன்; நிதித் திட்டமிடல் (Financial Planning) செய்வது எனது அன்றாட வழக்கம்... என்கிறமாதிரி உங்களுக்கான தொழிலை உங்களுக்குள்ளிருந்து நீங்களே கண்டறிய முடியும்.

பொதுவாக, தொழில்முனைவு என்பது மக்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்வதும், வாடிக்கையாளர்களின் தினசரி சிக்கல்களைத் தீர்ப்பதும் ஆகும். எனவே, உங்களுடைய பொழுதுபோக்கு அல்லது அன்றாட சிந்தனைகள் இதனுடன் பொருந்துகின்றனவா என அறிந்து வைத்திருப்பது நன்று.

நீங்கள் செய்யவிருக்கும் தொழிலைப் பற்றி, ஏற்கெனவே சந்தையில் இருக்கும் தொழில் முனைவர்களிடம் கேட்டு, அதன் சாதக பாதகங்களைத் தெரிந்து வைத்திருப்பது பின்னாளில் உங்களுக்கு உதவக்கூடும்.

சரியான தொழில் நிபுணர்களைக் கண்டறிந்து அவசியமான ஆலோசனைகளைப் பெறுவது கூடுதல் பலம் சேர்க்கும்.

வேலையிலிருந்து விடுபடுங்கள்

இங்கே சுட்டிக்காட்டப்பட்ட சில விஷயங் களை நீங்கள் செய்துவிட்டால், நீங்கள் பார்த்துவரும் வேலையிலிருந்து விடுபடலாம்.

நீங்கள் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் ஏதுமிருந்தால், அதனைச் சரியாகப் பெற்றுக் கொள்ளுங்கள். வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து நீங்கள் இணக்கத்துடன் வெளியேறுவது நல்லது. ஏனெனில், நீங்கள் செய்யப்போகும் தொழில், நீங்கள் வெளியேறிய நிறுவனத்தின் தொழிலாகவும் இருக்கலாம். இணக்கமாகச் செல்லும்பட்சத்தில், பின்னாள்களில் உங்கள் தொழிலுக்குத் தேவையான ஆர்டர் இந்த நிறுவனத் திடமிருந்தேகூட பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் விருப்பத்தைத் தொழில்முனைவாக்குங்கள்


உங்களுடைய விருப்பத்தை நீங்கள் தொழிலாக மாற்றியபிறகு, நீங்கள்தான் அதற்கு முழுமையான உரிமையாளர். ஒரு நிறுவனத்தில் நாம் வேலை பார்க்கும்போது, பொதுவாக, எட்டு மணி நேரமே நமக்கான பொறுப்பாக இருந்திருக்கும். 

வேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்!

ஆனால், நீங்கள் செய்யும் தொழிலில் நீங்கள் மட்டுமே முழுநேரப் பொறுப்பாளர். தொழிலின் ஆரம்பத்தில் உங்கள் நிறுவனத்தின் வரவு-செலவுகளை நீங்களே பொறுப்பேற்று திட்டமிடப் பழகுங்கள். உங்கள் புதிய தொழிலுக்கு நீங்கள்தான் விளம்பர தூதர் (Brand Ambassador) என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்

மாதச் சம்பளத்திலிருந்து விடுபட்டு நிச்சயமற்ற வருவாயை (தொழில்முனைவு) நோக்கிச் செல்லும் போது, உங்களுடைய மாத சேமிப்பு மற்றும் முதலீட்டை இடைவிடாமல் தொடர்ந்து செய்துவர முயற்சி செய்யுங்கள். பெறக்கூடிய வருவாயில் முதலில் சேமித்துவிட்டு, பிறகு செலவழிப்பது (Spend After Save) என்பது தொழில்முனைவோருக்கு ஒரு சவாலான காரியமே. ஆனாலும், அந்தச் சவாலில் ஜெயிப்பது மிக அவசியம். தொழிலுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே கடன் வாங்குங்கள்.

தொழிலின் வருவாய்மூலம் நீண்ட கால சொத்துகளைச் சேர்க்க முனையுங்கள். அது பங்கு களாகவோ, தொழிலுக்குத் தேவையான இயந்திரம், நிலமாகவோ அல்லது உங்கள் நிறுவனத்தின் காப்புரிமையாகவோ இருக்கலாம். தொடர் கற்றலுக்கு (Learning Business Skills) எப்போதும் நேரத்தை ஒதுக்குங்கள்.

தொழில்முனைவைத் தானியங்கியாக மாற்றுவதன் அனுகூலம்

நீங்கள் தொழிலைத் தொடங்கிய சில வருடங்களில், அதனைத் தானியங்கியாக (Automation) செயல்பட அனுமதிக்க வேண்டியது அவசியம். தொழில்முனைவு என்பது சுயதொழில் உரிமையாளர் ஆவது என்பது மட்டுமல்ல; தொழில்முனைவு என்பது பலருக்கு வேலை அளிக்கக்கூடியதாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரிவதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தொடங்கிய தொழிலில் புதிய தொழில்நுட்பத்தைச் சேருங்கள்; உங்களை மட்டுமே அந்தத் தொழில் நம்பியிருக்காமல் தானாகவே செயல்படச் செய்யுங்கள். இதுதான் பணம் பண்ணுவதின் (Passive Income) ரகசியம்.

உங்களுக்குள் இருக்கும் தொழில்முனைவு என்னும் தகுதியைக் கண்டறியுங்கள்; கண்டறிந்து திட்டமிடுங்கள். நீங்களும் ஜெயிக்கலாம்.