Published:Updated:

ரிசர்வ் வங்கியின் மொபைல் ஆப்!

ரிசர்வ் வங்கியின் மொபைல் ஆப்!
ரிசர்வ் வங்கியின் மொபைல் ஆப்!

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும்  iOS ஆகிய இரண்டு தளங்களிலும் இந்த ஆப் கிடைக்கும். இதில் IFSC மற்றும் MICR கோடுகள், வங்கி விடுமுறை நாள்கள், தற்போதுள்ள வட்டி விகிதங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். அதேபோல், ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்புகளையும் இந்த ஆப்பில் காண முடியும். கூகுள் ப்ளே ஸ்டாரில் 'Reserve Bank of India' என்ற பெயரில் இந்த ஆப் கிடைக்கும்.

ரிசர்வ் வங்கியின் மொபைல் ஆப்!

மேலும், ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம், புதிய ரூபாய் நோட்டுகள் குறித்த விழிப்பு உணர்வு செய்திகளும் இந்த ஆப்பில் பார்க்கலாம். குறிப்பாக, 'Push' நோட்டிஃபிகேஷனை ஆன் செய்வதன் மூலம், ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளையும் இந்த ஆப் மூலம் அறிந்து கொள்ள முடியும்.