Published:Updated:

How to: ஆன்லைன் மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? | How to avoid online scams?

Scam (Representational Image) ( Photo by Mikhail Nilov from Pexels )

மெயில், குறுஞ்செய்திகளில் இருக்கும் லிங்கை ஓப்பன் செய்யாதீர்கள். அவற்றின் வழியே மால்வேர் (Malware) அனுப்பப்பட்டு உங்களுடைய பேங்க் விவரங்கள் திருடப்படலாம், அல்லது உங்களுடைய பாஸ்வேர்டுகள் கண்டறிப்பட்டு பணம் எடுக்கப்படலாம் என்பதால் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.

Published:Updated:

How to: ஆன்லைன் மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? | How to avoid online scams?

மெயில், குறுஞ்செய்திகளில் இருக்கும் லிங்கை ஓப்பன் செய்யாதீர்கள். அவற்றின் வழியே மால்வேர் (Malware) அனுப்பப்பட்டு உங்களுடைய பேங்க் விவரங்கள் திருடப்படலாம், அல்லது உங்களுடைய பாஸ்வேர்டுகள் கண்டறிப்பட்டு பணம் எடுக்கப்படலாம் என்பதால் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.

Scam (Representational Image) ( Photo by Mikhail Nilov from Pexels )

தொழில்நுட்பங்கள் பல வகையிலும் மக்களின் தேவைகளுக்கு உதவி வருகின்றன. குறிப்பாக, பணப் பரிமாற்றங்களில் டெக்னாலஜியின் பயன்பாடு இன்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. கூடவே அதன் மூலம் சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஆன்லைன் பணப் பரிமாற்றம் அதிகரித்த பின், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. இதில் பணத்தை இழந்தவர்கள் பலர். ஆன்லைனை பொறுத்தவரை மிக எளிதாக இந்த மோசடிகள் நடந்தேறி வருவதால், அதிலிருந்து எப்படி நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் கூறுகிறார்.

Scam (Representational Image)
Scam (Representational Image)
Photo by Anna Tarazevich from Pexels

அலைபேசி அலர்ட்!

1. ஆன்லைனில் பண பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டியது ஆன்லைன் வலைதளைங்களில் மட்டுமல்ல, உங்களுடைய அலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தி, இன்கம்மிங் கால்களிலும்தான். உங்கள் எண்ணுக்கு புதிய எண்ணிலிருந்து, அல்லது சந்தேகிக்கக்கூடிய எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை தவிர்க்கலாம். அந்த அழைப்பை ஏற்கும்பட்சத்தில், மறுமுனையில் பேசும் நபர் கேட்கும் தகவல்கள், செய்யும் செயல்களை மேற்கொள்ளக் கூடாது. உதாரணமாக, 'நாங்கள் இந்த கம்பெனியில் இருந்து பேசுகிறோம், உங்களுக்கு ஒரு ஓடிபி (OTP) அனுப்பியிருக்கிறோம்' என்று பேசினால், நம்பிவிடக் கூடாது. ஒருவேளை, நிஜமாகவே கம்பெனி அழைப்பாக இருக்குமோ என்று எண்ணும்பட்சத்தில், அவர்கள் தெரிவித்த கம்பெனியின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு நீங்களே நேரடியாகப் பேசலாம். கொஞ்சம் நேரமெடுக்கும் வேலை என்றாலும், பணம் பாதுகாக்கப்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

லிங்கை ஓப்பன் செய்யாதீர்கள்!

2. உங்களுடைய மெயிலுக்கு, எண்ணுக்கு மெயில், குறுஞ்செய்திகளில் இருக்கும் லிங்கை ஓப்பன் செய்யாதீர்கள். சில நேரங்களில் பிரபல கம்பனிகளின் பெயரை மென்ஷன் செய்து லிங்க் அனுப்பப்பட்டிருக்கும்; அல்லது உங்கள் பெயருக்கு பரிசு விழுந்துள்ளதாகவும், அதைப் பெற அந்த லிங்கை க்ளிக் செய்யுமாறும் அனுப்பியிருப்பார்கள். இது போன்ற லிங்குகளின் வழியே உங்களுடைய கணினிக்கு மால்வேர் (Malware) அனுப்பப்பட்டு உங்களுடைய பேங்க் விவரங்கள் திருடப்படலாம், அல்லது உங்களுடைய பாஸ்வேர்டுகள் கண்டறிப்பட்டு பணம் எடுக்கப்படலாம் என்பதால் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.

Online scam
Online scam
Pexels

QR code... கவனம்!

3. உங்களுடைய UPI (Unified Payments Interface) கடவுச்சொல்லை எந்தக் காரணத்துக்காகவும், யாரிடமும் பகிராதீர்கள். அதேபோல, QR code வழியாகவும் ஆன்லைன் மோசடிகள் நடக்கின்றன என்பதால், தேவையில்லாத இடங்களில், அவசியமற்று QR code -ஐ ஸ்கேன் செய்யாதீர்கள்.

ஸ்கிரீன் ஷேரிங்..? நோ!

4. உங்களை ஸ்கிரீன் ஷேர் செய்யச் சொல்லி எந்த அழைப்பு வந்தாலும், 'நாங்கள் உங்களுடைய வங்கியில் இருந்து பேசுகிறோம்' என்று என்ன கூறிக் கேட்டாலும் தவிர்த்துவிடுங்கள். ஸ்கிரீன் ஷேர் செய்யும் ஆப்பை நிறுவாதீர்கள்.

Mobile  (Representational Image)
Mobile (Representational Image)

அனுமதி கொடுக்கும்போது..!

5. உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஆஃப்களை நிறுவும்போது உங்களிடம் கேட்கப்படும் அனுமதிகள் அனைத்துக்கும் கண்ணை மூடிக்கொண்டு 'accept' கொடுக்காதீர்கள். அதனைப் படித்துப் பார்த்து, உங்களுக்கு சரியென்றால் மட்டுமே அனுமதி கொடுங்கள். இல்லையெனில், உங்கள் தகவல்களை எடுப்பதற்கு நீங்களே அனுமதி கொடுத்தாகிவிடும்

இந்த ஆப் அவசியம்தானா?!

6. உங்களுடைய ஸ்மார்ட்ஃபோனில் தேவையில்லாமல் எந்த ஆப்பையும் நிறுவாதீர்கள். தேவையென்றால் மட்டும், அதுவும் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னரே அதை டௌலோடு செய்யுங்கள்.

ஆன்லைனில் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கான இந்த அடிப்படைகளை தவறாமல் பின்பற்றுங்கள்!