Published:Updated:

எங்கே ரகசியம் காப்பது; தவிர்ப்பது... பணத்தைப் பிறரிடம் பகிர எது லிமிட்? - உளவியல் விளக்கம்

பணம் சார்ந்த விஷயங்களில் ஒவ்வொருவரிடமும் எப்படி இயல்பாய் நடந்துகொள்வது, உரையாடுவது... விளக்குகிறார், உளவியல் மருத்துவர் சுபா சார்லஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ழைப்புக்கு ஒரு மதிப்பீடு வைத்துக்கொள்கிறோம். அதுவே, பணம். ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பெயரும் அதனதன் மதிப்பும் மாறுபட்டாலும் பணம், வாழ்வில் முதன்மை இடத்தைப் பெறுகிறது.

சக மனிதர்களோடு பணத்தைப் பகிர்ந்துகொள்வது அல்லது பணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொள்வது எப்போதும் முக்கியமான ஒன்று. யாரிடம், எங்கே, எப்படி நடந்துகொள்கிறோம் என்பது பண விஷயத்தில் கவனிக்கத்தக்கது. இதை, உளவியல்ரீதியில் அணுகலாம்.

பணம் சார்ந்த விஷயங்களில், ஒவ்வொருவரிடமும் எப்படி இயல்பாய் நடந்துகொள்வது, உரையாடுவது... விளக்குகிறார், மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
பணம் சம்பாதிக்கும் விஷயத்தில் நீங்கள் எந்த வகை?

பெற்றோர்

முடிந்த அளவு, வரவுகளைப் பெற்றோரிடம் ஒப்படைக்கலாம். கூடிய மட்டும், பரிவர்த்தனை விவரங்களை முழுமையாக அவர்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டேயிருக்கலாம். பின்னாள்களில் ஏற்படும் பணச்சிக்கல்களை நிவர்த்திசெய்ய அவர்களிடம் எளியவழி காத்திருக்கும். எனவே, வாழ்க்கைத்துணையுடனான பர்சனல் ஸ்பேஸ் இருப்பினும், பணம் தொடர்பானவற்றில் பெற்றோரோடு வெளிப்படையான உரையாடலில் ஈடுபடுவது எப்போதுமே தேவை. அந்தக் கலந்துரையாடல் மிகவும் நல்லது. எத்தனை உயரம் சென்றாலும் பண விஷயத்திலும் உச்சபட்ச நம்பிக்கைக்கு உரியவர்கள், பெற்றோரே. சார்ந்திருக்கும் பெற்றோர்கள், சில சமயங்களில் எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்புண்டு. எனவே, அவர்களிடம் பணம்குறித்த வெளிப்படைத் தன்மையைத் தவிர்க்கலாம்.

துணை

இருவரில் யாராவது ஒருவர் குடும்பத்தின் கணக்குவழக்கை பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இது, துணையுடனான புரிந்துணர்வின் அடிப்படையில் செய்துகொள்ளவேண்டிய ஒப்பந்தம். இருவரும் சம்பாதிப்பவர்களாக இருக்கும்பட்சத்தில், அவரவருக்கான பெரிய தேவைகளைப் பரஸ்பரம் உரையாடிக் கொள்ளலாம். சின்னச்சின்ன செலவுகள்குறித்துப் பெரிய விவாதங்கள் வேண்டாம். பண விவாகரத்தில் ரகசியம் காத்தல், இல்லற வாழ்வைப் பாதிக்கும். குடும்பத்துக்கான பொதுச் செலவுகளுக்கென தனியாகப் பணம் பிரித்துவைக்கலாம். முடிந்தவரை தனிப்பட்ட தேவைகளைத் தன்னுடைய வரையறைக்குள் பூர்த்திசெய்துகொள்ள முயல வேண்டும். கைமீறும்போது, துணையிடம் பணம்கேட்கத் தயக்கம் வேண்டாம். ஆனால், அதேநிலை தொடரக்கூடாது.

உறவு
உறவு

பிள்ளைகள்

பணம் பற்றிய யதார்த்தத்தை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புகட்ட வேண்டும். சராசரியாக 8 வயது குழந்தை, குடும்பத்தினரின் உரையாடல்களையும் விளக்கங்களையும் எளிதில் புரிந்துகொள்ளத் தொடங்கும். குழந்தையிடம் வீட்டுப் பொருளாதார நிலைகுறித்து ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம். ஏதோ ஒரு பொருளை வாங்கித் தரச் சொன்னால், அந்தப் பொருளின் மதிப்பை குழந்தைக்கு எடுத்துச்சொல்ல முயல வேண்டும். அதிலிருந்தே, பொருள் தனக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை குழந்தையே தீர்மானித்துக்கொள்ளப் பழகும். வெளியே கடைவீதி போன்ற வணிக இடங்களுக்கு எப்போதும் குழந்தைகளை கூட்டிச்செல்ல வேண்டும். பேரம் பேசுவதையும், தேர்ந்தெடுத்து பொருள் வாங்குவதையும், பட்ஜெட் போடுவதையும் கவனிக்கிற குழந்தை இயல்பாகவே பணம் குறித்த தெளிவைப் பெறும்.

என் பணம் என் அனுபவம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நண்பர்கள்

வீட்டின் பணச்சிக்கல் குறித்து தனிமையில் நண்பரோடு பேசலாம். சேமித்துச் செலவழிக்கும் வழிகுறித்து வீட்டில் அமர்ந்து உரையாடலாம். பணத்தை இழக்க வேண்டும், இல்லையேல் நட்பை இழக்க நேரிடும் என தலைமேல் கத்தியாகத் தான் இவர்களை அணுகவேண்டியுள்ளது. சம்பள விவரங்களை நண்பர்களிடம் பகிர்வதில் கவனம் அவசியம். உதவிகள் கேட்கும் பட்சத்தில், கடனாக அல்லாமல் இயன்ற பணத்தைக் கொடுத்து ஒதுங்கிவிடுவது நட்பில் விரிசல் விழாமல் காக்கும். நண்பர்கள் இருவரும் தத்தம் வரவுசெலவுகுறித்த உரையாடலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நிறைய நண்பர்கள் சேர்ந்து குழுவாக இருக்குமிடத்தில் தனிப்பட்ட வருமானம், செலவு உள்ளிட்ட உரையாடலை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தான் செலவு செய்ய நேர்கிற சூழலில், தன்னுடைய பட்ஜெட்டை கூச்சமின்றி நட்புக்குழுவில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

பிள்ளைகள்
பிள்ளைகள்
பணம் சம்பாதிக்க 100 பாடங்கள்... வழிகாட்டும் அனுபவங்கள்!

சக ஊழியர்கள்

தினசரி பேட்டா, மாதச் சம்பளம், அலவன்ஸ் என அலுவலகத்தில் ஒருவரது சகல பணப் பரிவர்த்தனைகளிலும் மூக்கை நுழைக்கக் கூடாது. அதேவேளையில், தனக்கென திட்டமிட்டுக்கொண்ட தினசரிச் செலவுகள்குறித்து சக ஊழியர்களிடம் சகஜமாகப் பேசலாம். இதனால் கடன் உள்ளிட்ட தேவையற்ற மனக்கசப்புகள் வந்து சேராது. ஒரே அலுவலகத்தில் பணியாற்றுகிற சக ஊழியர்கள், ஒருவருக்கொருவர் தேவைக்கேற்ப சின்னச்சின்ன செலவுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டிவரும். அந்தச் சமயங்களில் அவர்களைக் காயப்படுத்தாமல், தனது பண நிலைமையை விளக்க வேண்டும். தேவையற்ற சூழலில் தனது பொருளாதார நிலையைப் பற்றி விளக்குவது எப்போதுமே குழப்பத்தையும் சங்கடத்தையுமே விளைவிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு