Published:Updated:

தொடர்பில்லாத அட்டை பரிவர்த்தனை... பாதுகாப்புடன் எப்படிப் பயன்படுத்துவது?

அட்டை பரிவர்த்தனை
பிரீமியம் ஸ்டோரி
News
அட்டை பரிவர்த்தனை

DIGITAL PAYMENT

ரிசர்வ் வங்கி தொடர்பில்லாத அட்டை பரிவர்த்தனை செய்வதற் கான உச்சவரம்பை ஜனவரி 1 முதல் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஐந்து முறை பின் நம்பர் செலுத்தாமல் ரூ.5,000-க்கு குறைவான பரிவர்த்தனையை வாடிக்கை யாளர்கள் செய்யலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வசதியாக்கு வதற்காக இந்த உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வாடிக்கையாளரின் பார்வையில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பொருள்களை வாங்குவதற்கு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பணத்தைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டாம். பணம் திருடுபோவதற்கு வாய்ப்பு இல்லை. டெபிட் கார்டு என்றால் வங்கியில் இருக்கும் காலகட்டத்தில் பணத்துக்கு வட்டி கிடைக்கும், கிரெடிட் கார்டு என்றால் குறுகியகாலத்துக்கு வாங்கும் பொருளுக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை போன்ற பல நன்மைகள் இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் இந்த அட்டை களை பெருமளவில் பயன்படுத்தி பொருள்களை வாங்குகிறார்கள்.

ஷியாம் ராம்பாபு 
ஷியாம் ராம்பாபு 

சில ஆண்டுகளுக்கு முன் கடன் அட்டை பயன்படுத்தும்போது எந்த பின் நம்பரையும் செலுத்த வேண்டிய தில்லை. உதாரணத்துக்கு வாடிக்கை யாளர் ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றால் பில்லுக்கான பணத்தை செலுத்துவதற்கு டெபிட் கார்டை சர்வரிடம் கொடுப்பார். அவர் அந்தக் கார்டை தேய்க்கும் ஸ்வைப்பிங் மெஷின் (Point of Sale POS Swiping Machine) இருக்கும் இடத்துக்குச் சென்று கார்டை தேய்த்து பணத்தை எடுத்துக் கொள்வார். வாடிக்கையாளரின் கண்காணிப்பில் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நடைபெறாது. பிறகு, மீண்டும் வாடிக்கையாளர் இருக்கும் இடத்துக்கு வந்து அவருடைய கார்டைத் திரும்ப தந்துவிடுவார்.

இதில் பல குளறுபடிகள் மற்றும் தவறுகள் ஏற்பட்டதால் வங்கிகள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதனால் வங்கிகள் கார்டுகளை அதிக பாதுகாப்பு வசதிகளுடன் வெளியிட்டன. ஒவ்வோர் அட்டையிலும் இ.எம்.வி சிப் (EMV Chip) பொருத்தப்பட்டு அதில் வாடிக்கை யாளரின் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை நகல் எடுத்து டூப்ளிகேட் கார்டுகளை உருவாக்க முடியாது. அதனால், வாடிக்கையாளரின் தகவல்களைத் திருடி போலி கார்டுகள் தயாரித்து பணமோசடிகளில் ஈடுபட முடியாது.

மேலும், அட்டையை உபயோ கிக்கும்போது வாடிக்கையாளர் தமக்கு மட்டும் தெரிந்த பின் நம்பரை செலுத்தினால் மட்டுமே பரிவர்த்தனை முழுமை அடையும் என்ற வகையில் அதன் பயன்பாட்டு முறையை மாற்றி அமைத்தனர். மேலும், வாடிக்கையாளரின் கார்டுடன் அவருடைய கைபேசி நம்பரை இணைத்து எந்த பரிவர்த் தனை நடைபெற்றாலும் உடனடியாக கைபேசிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பினர்.

அதன் காரணமாக மேலே சொன்ன உதாரணத்தில் ஹோட்டலுக்கு ஒருவர் சாப்பிடச் சென்றால் சர்வர் ஸ்வைப்பிங் மெஷினை வாடிக்கையாளர் இருக்கும் இடத்துக்கே கொண்டு வருவார். வாடிக்கையாளர் கண்காணிப்பில் பின் நம்பரை செலுத்துவதால் தவறான பரிவர்த் தனைகள் தடுக்கப்படும்.

நமது கார்டு திருடுபோனாலும் பின் நம்பர் தெரியாத காரணத்தால் தவறான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது. நகல் எடுத்து போலி கார்டுகள் தயாரித்து மோசடி செய்யவும் முடியாது. இதன் காரணமாக நமது பணத்துக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும்.

ஆனால், ஒவ்வொரு முறையும் பின் நம்பர் செலுத்தும் முறை பரிவர்த்தனைகள் செய்வதற்கான கால தாமதத்தை ஏற்படுத்துகிறது. அதனால் குறைந்த அளவு பரிவர்த்தனை செய்வதற்கு மட்டும் பின் நம்பர் செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி ரூ.2,000 வரை பரிவர்த்தனை செய்பவர்கள் விருப்பப்பட்டால் பின் நம்பர் செலுத்தாமல் பரிவர்த்தனை செய்வதற்கு வங்கிகள் வசதி செய்து கொடுக்க ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.

அதனால் வங்கிகள் வை-ஃபை (wi-fi) வசதியுடன் புதிய கார்டுகளை வெளி யிட்டன. இந்தத் தொழில்நுட்பத்தின்படி பணம் செலுத்தும் அட்டையைக் குறிப்பிட்ட தூரத்தில் ஸ்வைப்பிங் மெஷின் அருகில் கொண்டு சென்று பரிவர்த்தனையை முடிக்க முடியும். இந்த வசதிகொண்ட அட்டைகள் அருகே தகவல் தொடர்பு அட்டைகள் (Near Field Communication) என்று அழைக்கப்பட்டன.

இந்த அட்டையைப் பயன்படுத்தி பின் நம்பர் செலுத்தாமல் ரூ.2,000 வரை பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிக்கப்பட்டன. இவ்வாறு வாடிக்கையாளர் தொடர்பு இல்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குதான் தொடர் பில்லாத பண பரிவர்த்தனை (Contactless Transaction Limit) என்று பெயர்.

இந்தப் பரிவர்த்தனைகளில் சிலவகை ஆபத்துகள் ஒளிந்து இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன் ஒரு வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஒரு நபர் தனது பர்ஸை கால்சட்டை பாக்கெட்டில் வைத்து நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அவர் அருகில் மற்றொரு நபர் ஸ்வைப்பிங் மெஷினைக் கொண்டு சென்று அவருக்குத் தெரியாமல் அவர் அட்டை யிலிருந்து பணம் எடுப்பதுபோல காட்சிகள் அந்த வீடியோவில் இருந்தன. இது நிஜத்தில் நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதால் இந்த வகை கடன் அட்டைகள் வாடிக்கை யாளருக்குத் தேவை என்றால் மட்டும் வங்கிகள் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி வாடிக்கை யாளர் இந்த வசதி வேண்டுமா இல்லையா என்று எந்தத் தகவலும் கொடுக்கவில்லை என்றால் இந்த வசதி இல்லாத கார்டுகளைத்தான் வங்கிகள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

அட்டை பரிவர்த்தனை
அட்டை பரிவர்த்தனை

உங்கள் கார்டில் சிப் பகுதியில் வை-ஃபை சின்னம் (wi-fi symbol) இருந்தால் உங்கள் கார்டில் இந்த வசதி உள்ளது என்று அர்த்தம்.

இதன் உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர் பின் நம்பர் செலுத்தாமல் 5,000 ரூபாய் வரை தமது அட்டைகளைப் பயன் படுத்தி பரிவர்த்தனைகளில் ஈடுபட முடியும்.

ரிசர்வ் வங்கி வாடிக்கை யாளரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த உச்ச வரம்பை வரையறுத்துக் கொள்ளலாம் என்று அறிவித் துள்ளது. கொரோனா நோய் காலத்தில் வாடிக்கையாளர் சுலபமாக எந்தத் தொடர்பும் இல்லாமல் பாதுகாப்புடன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்வதற்காகவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வசதி ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்றால் வாடிக்கையாளர் வங்கிக் கிளையிலோ, இணைய வங்கி சேவை மூலமாகவோ, போன் பேங்கிங் மூலமாகவோ மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். அதனால் அதிக அளவு பண பரிவர்த்தனைகள் செய்பவர்கள் மட்டும் இந்த உச்ச வரம்பை அதிகரித்துக் கொள்ளலாம்.

மேலும், அட்டை தொலைந்து விட்டால் அதைப் பயன்படுத்தி பின் நம்பர் இல்லாமல் ஒரு முறை 5,000 ரூபாய் என ஐந்து முறை ஆக மொத்தம் ரூ.25,000 திருடுவதற்கு வாய்ப்புள்ளது. பின் நம்பர் என்ற வசதி வாடிக்கையாளரின் பாதுகாப்புக் காகவே செய்து தரப்பட்டுள்ளது.

இந்த வசதி தேவைப்படாத வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளை அணுகி இந்த வசதியை நிறுத்திக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தமது போன் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவும் இந்த சேவையை நிறுத்திக்கொள்ள முடியும். மேலும், இந்த உச்சவரம்பை 0 - 5,000 என்ற அளவுக்குள் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஒரு வாடிக்கையாளர் தமது உச்ச வரம்பை 1,000 ரூபாய் என்று வைத்திருந்தால் அந்த கார்டை 1,000 ரூபாய் வரை மட்டுமே தொடர்பில்லாமல் பயன்படுத்த முடியும். இதன் மூலம் கார்டு திருடு போனாலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5,000 ரூபாய் வரையே திருட முடியும். அதனால் தேவை இருந்தால் மட்டும் தொடர்பில்லாத பரிவர்த்தனை களுக்கான உச்சவரம்பை அதிகரித்துக் கொள்ளலாம்.

தொடர்பில்லாத அட்டை பரிவர்த்தனை... பாதுகாப்புடன் எப்படிப் பயன்படுத்துவது?

பணத்தை நமது கார்டிலிருந்து திருடாமல் இருப்பதற்கு பிரத்யேக வாலட் இருக்கிறது. இதற்கு RFID (Radio Frequency Identification) Wallet என்று பெயர். இந்த வசதி கொண்ட பர்ஸில் நமது கார்டை வைத்து இருக்கும்போது யாரும் பணம் எடுக்க முயற்சி செய்தால் அந்த பரிவர்த்தனை நடைபெறாது. இதன் மூலம் திருட்டுகளிலிருந்து நமது பணம் காப்பாற்றப்படும். இதுபோன்ற பர்ஸுகள் 300 ரூபாய் விலையிலும் கிடைக்கின்றன.

மேலும் ரிசர்வ் வங்கி மீண்டும் மீண்டும் நடைபெறும் eMandate உச்சவரம்பையும் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. உதாரணத்துக்கு வாடிக்கையாளர் ஒருவர் ஒவ்வொரு வாரமும் எஸ்.ஐ.பி (SIP) முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேமித்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு வங்கியிலிருந்து தானாகப் பிடித்தம் செய்வதற்கு eMandate கொடுத்திருந்தால் முன்பு 2,000 ரூபாய் மட்டுமே அவ்வாறு செலுத்த முடியும். இப்போது அதிகரிக்கப்பட்ட உச்ச வரம்பின் மூலம் 5,000 ரூபாய் வரை eMandate முறையில் செலுத்த முடியும். இந்த அதிகரிப்பு காரணமாக eMandate முறையில் குறிப்பிட்ட கால இடை வெளியில் நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, இ.எம்.ஐ மூலம் கடன் செலுத்துவது போன்றவை 5,000 ரூபாய் என்ற அளவுக்குச் செய்ய முடியும்.

எந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியும் சாதகங்களும் பாதகங்களும் கொண்ட தாகவே இருக்கும். அதை நன்கு புரிந்து கொண்டு சரியான முறையில் கையாண்டால் பாதகங்களைக் குறைத்து சாதகங்களை அதிகமாக்கிக் கொள்ளலாம்.

பிட்ஸ்

ரும்பின் விலையை ஒரு டன்னுக்கு ரூ.2,400 வரை இரும்பு தயாரிக்கும் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இனிவரும் நாள்களில் இரும்பின் விலையை இன்னும்கூட உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது!