Published:Updated:

`நாட்டின் பாதிக்கும் மேலான சொத்துகள் வெறும் 10% பேரிடமே!' - ஆய்வில் தகவல்

நமது நாட்டில் உள்ள மொத்த கடன் மற்றும் முதலீட்டு அளவுகளைத் தொகுத்து ஆய்வு செய்யும் தேசிய மாதிரி சர்வே (National Sample Survey) 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நமது நாட்டில் உள்ள மொத்த கடன் மற்றும் முதலீட்டு அளவுகளைத் தொகுத்து ஆய்வு செய்யும் தேசிய மாதிரி சர்வே (National Sample Survey) 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு, அந்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி நமது நாட்டில் உள்ள மொத்த சொத்துகளின் மதிப்பில், நகர்ப்புற பகுதியில் வசிக்கும் முதல் 10% பணக்காரர்கள் மொத்த நகர்ப்புற சொத்தில் 55.7% சொத்தை வைத்துள்ளனர் என்றும், அதே போல் கிராமப்புற பகுதியில் வசிக்கும் முதல் 10% பணக்காரர்கள் மொத்த நகர்ப்புற சொத்தில் 50.8% சொத்தை வைத்துள்ளனர் என்று இந்த சர்வே விவரங்கள் தெரிவித்துள்ளன.

Money (Representational Image)
Money (Representational Image)
உயில் எழுதினால் மட்டும் பத்தாது; குடும்ப அமைதிக்கு இந்த 4 விஷயங்களையும் கவனிக்க வேண்டும்!

இந்த சர்வேயில், மொத்த சொத்துகளின் அளவீடாக கையிருப்பில் உள்ள பணம், கட்டடங்கள், விவசாய நிலங்கள், பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல், வருமான படிநிலைகளில் கீழ் நிலையில் உள்ள 50 சதவிகித இந்தியர்களிடம் 10%-க்கும் குறைவான சொத்துகள் மட்டுமே உள்ளன என்றும் அந்த சர்வே தெரிவித்துள்ளது. ஏழை பணக்காரர் இடையே உள்ள இந்த இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.

மேலும் கொரோனா ஊரடங்கு நமது நாட்டில் இந்த இடைவெளியை மேலும் அதிகரித்திருக்கலாம் என்று பல தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஊரடங்கு காரணமாக ஏழைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

வளர்ந்த நாடுகளில் இந்த இடைவெளி குறைவாக இருக்கும். அதற்கு நேர் மாறாக வளரும் நாடுகளிலும், ஏழை நாடுகளிலும் இந்த இடைவெளி அதிகமாக இருக்கும்.

Money
Money
Photo by Disha Sheta from Pexels
நண்பனுக்காக 20 வருடங்கள் 10 ரூபாய் நோட்டை பாதுகாத்த ராணுவ வீரர்; நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த இடைவெளி அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக எப்போதும் இருக்காது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது இந்த இடைவெளியை குறைக்க உதவும். வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் இந்த இடைவெளியை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றத்தை கண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ளார். அதானி குழுமத்தை சேர்ந்த கௌதம் அதானி விரைவாக வளரும் பணக்காரர்களில் உலக அளவில் முன்னணியில் உள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்வது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அந்த வளர்ச்சி சமச்சீராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது ஆகும். அப்பொழுதுதான் நாம் ஒரு வல்லரசு நாடாக வளரமுடியும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு