Published:Updated:

இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.5,000 கோடி செலவு; சென்ற ஆண்டைவிட 24% அதிகம்!

500 Rupee

ரூபாய் தாள்கள் அச்சடிக்க நிதியாண்டு 2020-21-ல் ரூ. 4,012 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில், 2021-22ல் செலவிடப்பட்ட தொகை 24 சதவிகிதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மக்கள் பொருள்களை வாங்க சில்லறைகளைவிட ரூபாய் நோட்டுகளையே அதிகம் உபயோகித்து வருகின்றனர். எனவே, இந்திய ரிசர்வ் வங்கி அதிக பணத் தாள்களை அச்சிடுவதற்கு செலவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் அதிகரித்து வரும் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கத் திட்டமிட்ட மத்திய அரசு, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தது. அந்தச் சமயத்தில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை அச்சிட 2016 -2017-ம் ஆண்டில் சுமார் ரூ. 8,000 கோடி வரை செலவு செய்யப்பட்டது.

Reserve Bank of India
Reserve Bank of India
விகடன்

இந்நிலையில், தற்போது மக்களின் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய 2021-2022-ம் ஆண்டில் சுமார் 4,984.8 கோடி ரூபாய் வரை செலவு செய்து, பணத் தாள்களை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. நிதியாண்டு 2020-21-ல் ரூ.4,012 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில், முடிந்த நிதியாண்டில் 24 சதவிகிதம் அதிகம் செலவிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism