Published:Updated:

என் பணம் என் அனுபவம்!

readers experience
பிரீமியம் ஸ்டோரி
News
readers experience

ஓவியங்கள் : பிள்ளை

வரவு செலவுக் கணக்கு அவசியம்!

என் பணம் என் அனுபவம்!

நான் மளிகைக் கடை நடத்தி வருகிறேன். தூரத்து உறவினர் ஒருவரின் மகனை பணிக்கு வைத்திருந் தேன். நன்றாக வேலைசெய்யக்கூடியவன் என்பதால் சம்பளத்துடன் தங்குவதற்கு இடமும் சாப்பாடும் கொடுத்துவந்தேன். நான் பர்ச்சேஸுக்குச் செல்லும் போது அவன் கடையைப் பார்த்துக்கொள்வான். ஆரம்பத்தில் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், கொஞ்ச காலமாக, கல்லாப்பெட்டியில் பணம் குறைவதாக உணர்ந்தேன். நான் சரியாக கணக்கைப் பராமரிக்காத தால், காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர் ஒருவரின் யோசனைப்படி, கடந்த ஒரு மாதமாக வரவு செலவுக் கணக்குகளைக் குறித்து வைத்துவந்தேன். ஒரு மாதத்தில் ஐந்து நாள்களில் ரூ.2,300 வரை பணம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பையனை அழைத்து விசாரித்தபோது, முதலில் மறுத்தவன், பிறகு ஒப்புக் கொண்டான். அவனை வேலையைவிட்டு நிறுத்தி விட்டேன். எவ்வளவு நம்பிக்கையான நபரை வேலைக்கு வைத்தாலும் அன்றாடம் கணக்கைப் பராமரித்தால்தான் பண விஷயத்தில் தவறு நடப்பதைத் தடுக்க முடியும்!

- முரளிதரன், பட்டுக்கோட்டை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
என் பணம் என் அனுபவம்!

வாடிக்கையாளரே முக்கியம்!

வார விடுமுறையில் எங்கள் ஊரில் உள்ள ஒரு தியேட்டருக்குச் சென்றேன். தியேட்டரின் வாசலுக்கும் சாலைக்கும் இடையில் ஒரே ஒரு கார் மட்டும் செல்லும் குறுகலான சந்து உள்ளது. படம் முடிந்ததும் அந்தப் பாதையில் வெளியில் வரும்போது, கிட்டத்தட்ட முக்கால்வாசி தூரம் கடந்துவிட்டேன். அப்போது ஒரு கார் அந்தப் பாதையின் வழியே உள்ளே நுழைய முற்பட்டது. நான் பின்னால் செல்ல வேண்டும் என்றால், பத்து பதினைந்து அடிதூரம் இறங்கி பைக்கைத் தள்ளவேண்டும். ஆனால் அந்தக் கார், அரை அடி பின்னால் போனால் நான் போய்விட முடியும். காரில் இருந்த நபர் கீழே இறங்கி, வாட்ச்மேனை அழைத்து சத்தம் போட்டார். தியேட்டர் வாட்ச்மேன் ஓடிவந்து என்னைப் பின்னால் போகும்படி அதட்டினார். நான் வெகுதூரம் பின்னால் போவது சிரமமாக இருக்கும் என்றேன். உடனே காரில் வந்தவர் என்னை அசிங்கமாகத் திட்டிவிட்டு எனக்கு வழிவிட்டார். பிறகு விசாரித்தபோது அவர்தான் அந்த தியேட்டரின் ஓனர் என்றார்கள். வாடிக்கையாளர்களை மதிக்கத்தெரியாத அவருடைய தியேட்டருக்குப் போவதையே நான் நிறுத்திக்கொண்டேன்.

- பெருமாள், மெயில் மூலமாக

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் பணம் என் அனுபவம்!

கெளரவம் பார்க்காதீர்கள்!

எப்போதுமே தெருமுனை வியாபாரங்களில் பேரம் பேசுதல் இருக்கும் என்பதால், பொருளின் விலையைவிட 20 அல்லது 25% அதிகம் வைத்து விற்பனை செய்வதுண்டு. கொஞ்சம் பேசத் தெரிந்தவர்கள் மிகக் குறைந்த விலையில் பொருள்களை வாங்கிவந்துவிடுவார்கள். தெருமுனையில் விற்கப்படும் மிளகாய், புளி போன்றவற்றை நான் பேரம் பேசாமல் வாங்கிக் வருவேன். அப்போதுதான் பக்கத்து வீட்டுப் பெண்ணும் மிளகாய், புளி வாங்கி வந்தார். நான் வாங்கியதைவிடக் குறைந்த விலைக்கு அவர் வாங்கி வந்ததை, என் மனைவியிடம் சொல்லிவிட்டார். என் மனைவி என்னைத் திட்டினார். என் மனைவி சொல்வதும் சரிதான். பல நேரங்களில் பேரம் பேசத் தயங்கி, பெரும் பணத்தை இழக்கிறோம்!

- தேவேந்திரன், குளித்தலை

என் பணம் என் அனுபவம்!

விலையை வைத்து முடிவு செய்யாதீர்!

எங்கள் பகுதியிலுள்ள பாத்திரக் கடைக்குச் சென்று, “குறிப்பிட்ட ஒரு கம்பெனியின் குக்கர் உள்ளதா” எனக் கேட்டேன். கடையில் இருந்த ஒரு பெண், வேறு ஒரு குக்கரைக் காட்டி, “இது சூப்பராக இருக்கும்” என்றார். அந்தக் கம்பெனியை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால், விலை குறைவாக இருந்தது. அதை வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குள் அந்த குக்கரை வாங்கவைத்து விட்டார்கள். இரண்டே மாதத்தில் அது பழுதானது. கடைக்குச் சென்றுகேட்டால், அன்று உங்களிடம் பேசியவர், கம்பெனிக்காரர். நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட பொருளை வாங்கச் சொல்வதில்லை என்றார்கள். விலையைப் பார்த்து ஏமாந்துவிட்டேன்!

- மகேஸ்வரி, திருச்சி

என் பணம் என் அனுபவம்!

குறைந்த கட்டணத்தில் ரூம் புக் செய்யலாம்!

சமீபத்தில் பெங்களூருக்கு பிசினஸ் விஷயமாகச் சென்று வந்தேன். நான் பர்சேஸ் செய்யவேண்டிய இடத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் ரூம் புக்கிங் செய்வதற்காக ஆன்லைனில் தேடினேன். ஹோட்டல்களின் வெப்சைட்டில் உள்ள விலை விவரங்களைப் பார்த்தேன். சற்று அதிகமாக இருப்பதாகத் தெரிந்தது. பிறகு டூரிஸம் மற்றும் ஹோட்டல் புக்கிங் செய்வதற்கான வெப்சைட்டுகளில் தேடினேன். ஹோட்டல்களின் நேரடி வெப்சைட்டுகளில் குறிப்பிட்டிருந்த விலையிலிருந்து 40 - 50% வரை கட்டணம் குறைவாக இருந்ததால், அதன் மூலமாகவே அறையை புக்கிங் செய்தேன். ஆன்லைனில் குறைந்த கட்டணத்தில் அறைகள் கிடைக்க, ஏன் அதிக கட்டணம் தரவேண்டும்?

- ஹரி, சென்னை

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.