Published:Updated:

என் பணம் என் அனுபவம்!

readers experience
பிரீமியம் ஸ்டோரி
News
readers experience

ஓவியங்கள் : பிள்ளை

சூப்பர் வேலை... நல்ல சம்பளம்!

என் பணம் என் அனுபவம்!

நான் எம்.காம் முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இணையதளங்கள் மூலம் சில வேலைகளுக்கு விண்ணப்பித்து வந்தேன். குறிப்பிட்ட ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, மாதம் ரூ.25,000 சம்பளம் என்றார்கள். பிறகு அன்றைய தினமே அந்த நிறுவனத்துக்கு என்னை இன்டர்வியூவுக்கு அனுப்பினார்கள். அடுத்த நாளே நீங்கள் செலக்ட் ஆகிவிட்டீர்கள் என்று சொல்லி, வேலை பெற்றுத் தந்ததற்கான கட்டணமாக ரூ.20,000 கேட்டார்கள். நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி பணம் செலுத்தினேன். அடுத்த நாளிலிருந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். மூன்று நாள்கள் அலுவலத்தில் வேலை பார்க்கச் சொன்னவர்கள், பிறகு லைனுக்குப் போக வேண்டும் எனச் சொல்லி மார்க்கெட்டிங் அனுப்பினார்கள். அக்கவுன்டன்ட் வேலைக்கு எனச் சேர்த்துவிட்டு, அவர்கள் வேறு என்னவெல்லாமோ வேலைக் கொடுத்தார்கள். வேலை பெற்றுத்தந்த அலுவலகத்தில் கேட்டால், அவர்கள் என் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பதாக இல்லை. நான் வேலை பிடிக்காமல் ஊருக்கே போய்விட்டேன். வேலையின் தன்மை குறித்துச் சரியாக விசாரிப்பது அவசியம்.

-கதிரேசன், கோவில்பட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
என் பணம் என் அனுபவம்!

காசை இழக்க வைக்கும் கடைசி நேரப் பதற்றம்!

நான் கரன்ட் பில் செலுத்துவது முதல் கிரெடிட் கார்டு பில், வரிச் செலுத்துவது என எதையும் சரியான நேரத்தில் செலுத்தாமல், அபராதத்துடன் செலுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். சமீபத்தில் எனக்குத் திருமணம் ஆனது. என் நடவடிக்கைகளை இரண்டு மாதங்களாகக் கண்காணித்த என் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செலுத்திய அபராதத் தொகை மட்டுமே ரூ.28,000 எனக் கணக்குப்போட்டுச் சொன்னார். நான் பணம் கட்டிய ரசீதுகளை ஒரு ஃபைலில் போட்டு வைப்பது வழக்கம். அந்த ஃபைலைப் பார்த்துத்தான் எனக்குச் சுட்டிக்காட்டினார். கடைசி நாள் வரைக் காத்திராமல் முன்கூட்டியே கட்டணங்களைச் செலுத்துவதால் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தை இழக்காமல் இருக்கலாம்.

-ராகவ், புதுச்சேரி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் பணம் என் அனுபவம்!

மகளுக்குத் திருமணம்... மாங்கல்ய பிச்சை!

நான் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். என்னுடைய கடை இருக்கும் பகுதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் வந்தார். தன் கணவர் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தன் ஒரே மகளின் திருமணம் கூடிவந்திருப்பதாகவும் சொல்லி, திருமண பத்திரிகையைக் காட்டி னார். உடனே என் மனைவி 1,000 ரூபாயைத் தாலி வாங்கப் பயன் படுத்திக்கொள்ளுமாறு கொடுத்தார். கடையிலிருந்து ஐந்து புடவை களையும் கொடுத்தார். சமீபத்தில் பக்கத்து ஊரில் உள்ள என் மைத்துனர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு பெண் பிச்சைக் கேட்டு வந்தார். அதே பெண்... அதே வசனங்கள்... பத்திரிகையில் மட்டும் தேதி மாறியிருந்தது. நான் கொஞ்சம் கோபமாக, “இன்னுமா உன் மகளுக்குக் கல்யாணம் ஆகவில்லை” என்றதும், சுதாரித்த அந்தப் பெண் வேகவேகமாகச் சென்றுவிட்டார். மனமுவந்து உதவி செய்கிறவர்கள் போலியானவர்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.

-பாண்டியன், கள்ளக்குறிச்சி

என் பணம் என் அனுபவம்!

செகண்ட் ஹேண்ட்... உஷார்!

என் நண்பர் ஒருவர் ஆன்லைனில் டைனிங் டேபிள் ஒன்று வாங்கினார். ரூ.15,000 மதிப்புள்ள டேபிளை அவர் ரூ.7000-க்கு வாங்கியிருந்தார். நான் அவரிடம் பேசியபோது ஆன்லைனில் மிகக்குறைவான விலையில் பொருள்கள் கிடைப்பதாகச் சில வெப்சைட்டுகளின் முகவரியைக் கொடுத்தார். நான் அந்த வெப்சைட்டுகளில் தேடியபோது ரூ.9,000 விலையில் 40 இன்ச் எல்.இ.டி டிவி ஒன்றைப் பார்த்தேன். உடனே வாங்கிவிட்டேன்.இரண்டு மாதங்கள் வரை பிரச்னை ஏதும் இல்லை. நன்றாகத்தான் இருந்தது. பிறகு படம் மங்கலாகத் தெரிய ஆரம்பித்ததும், பக்கத்தில் உள்ள மெக்கானிக்கை அழைத்துக் காண்பித்தேன். ஏதோ ஒரு முக்கியமான பாகம் பழுதடைந்துவிட்டதாகச் சொல்லி ரூ.3,000 செலவாகும் என்றார். பிறகுதான் செகண்ட் ஹேண்டில் எந்தப் பொருளை வாங் கலாம், எந்தப் பொருளை வாங்கக் கூடாது என்ற தெளிவைப் பெற்றேன்.

-குருநாத், தென்காசி

என் பணம் என் அனுபவம்!

டிக்கெட் பத்திரம்!

நான் சமீபத்தில் செங்கல்பட்டிலிருந்து மாம்பலத்துக்கு, குடும்பத்துடன் மின்சார ரயிலில் சென்றேன். செங்கல்பட்டில் பைக்கை பார்க்கிங் செய்யும் நேரத்தில் என் மனைவியை டிக்கெட் எடுக்கச் சொன்னேன். அவர் டிக்கெட் எடுத்து ஹேண்ட்பேக்கில் வைத்துள்ளார். நானும் டிக்கெட் சரியாக எடுத்துள்ளாரா, எங்கே வைத்துள்ளார் என்று கேட்கவில்லை. மாம்பலத்தில் இறங்கியதும் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டைக் காண்பிக்குமாறு கேட்டார். என் மனைவி தன் பையில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. ஆனால், “ஹேண்ட்பேக்கில்தான் வைத்தேன்” என்றார் என் மனைவி. ஹேண்ட்பேக்கிலிருந்து என் மகன் செல்போனை எடுக்கும்போது கீழே விழுந்திருக்க வேண்டும் என என்னால் யூகிக்க முடிந்தது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் டிக்கெட் பரிசோதகர் கேட்டுக் கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் ரூ.1,500 வரை அபராதம் செலுத்தினேன். பணமும் நஷ்டமாகி, மன உளைச்சலுக்கும் ஆளானேன். எப்போதுமே பஸ், ரயிலில் ஏறும்முன் டிக்கெட்டுகளை இறங்கும் வரை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்துகொண்டேன்.

-தியாகராஜன், செங்கல்பட்டு

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.