Published:Updated:

"காணாமல்போனது செல்போன் மட்டுமல்ல..." - உங்களுக்கும் உதவலாம், இந்த அனுபவங்கள்!

அடுத்த நாளே நீங்கள் செலக்ட் ஆகிவிட்டீர்கள் என்று சொல்லி, வேலை பெற்றுத் தந்ததற்கான கட்டணமாக ரூ.20,000 கேட்டார்கள்.

செல்போன்
செல்போன்

பாஸ்வேர்டு முக்கியம்!

நான் பெங்களூரில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். கம்ப்யூட்டர் பாஸ்வேர்டு, மெயில் பாஸ்வேர்டு, பான் கார்டு விவரங்கள், ஆதார் கார்டு விவரங்கள், வங்கிக்கணக்கு எண், இணையதள வங்கி சேவைக்கான பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்கள், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு குறித்த முழுவிவரங்களை டைப் செய்து என் மெயிலில் வைத்துக்கொள்வது வழக்கம். அவசர நேரங்களில் மெயில் ஓப்பன் செய்து பார்த்துக் கொள்வேன். மேலும் அனுபவங்களுக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2OM3G9x

"காணாமல்போனது செல்போன் மட்டுமல்ல..." - உங்களுக்கும் உதவலாம், இந்த அனுபவங்கள்!

சமீபத்தில் வெளியூர் சென்றபோது பஸ்ஸில் தூங்கிவிட்டேன். அந்தச் சமயத்தில் என் மேல் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் எப்படியோ கீழே விழுந்துவிட, நான் கவனிக்காமல் இறங்கிவிட்டேன். வீட்டுக்கு வந்ததும் போனைத் தேடினால் காணவில்லை. பதற்றத்தில் வங்கிக்குத் தகவல் சொல்லாமல் விட்டுவிட்டேன். அடுத்த நாள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச்சென்றபோதுதான் என் கணக்கிலிருந்து ரூ.5,000 ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்யப் பட்டிருந்தது தெரியவந்தது. முக்கியமான தகவல்களை மெயிலில் வைப்பது தவறில்லை. செல்போனில் பாஸ்வேர்டு போடாமல் மெயில் ஓப்பன் ஆகுமாறு வைப்பதும் தவறு. எனவே, உங்கள் போனை ஓப்பன் செய்வதற்கான பாஸ்வேர்டு போட்டு வைப்பது மிகவும் முக்கியம்.

- சங்கர், பெங்களூரு

குறைந்த கட்டணத்தில் ரூம் புக் செய்யலாம்!

சமீபத்தில் பெங்களூருக்கு பிசினஸ் விஷயமாகச் சென்று வந்தேன். நான் பர்சேஸ் செய்யவேண்டிய இடத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் ரூம் புக்கிங் செய்வதற்காக ஆன்லைனில் தேடினேன். ஹோட்டல்களின் வெப்சைட்டில் உள்ள விலை விவரங்களைப் பார்த்தேன். சற்று அதிகமாக இருப்பதாகத் தெரிந்தது. பிறகு டூரிஸம் மற்றும் ஹோட்டல் புக்கிங் செய்வதற்கான வெப்சைட்டுகளில் தேடினேன்.

"காணாமல்போனது செல்போன் மட்டுமல்ல..." - உங்களுக்கும் உதவலாம், இந்த அனுபவங்கள்!

ஹோட்டல்களின் நேரடி வெப்சைட்டுகளில் குறிப்பிட்டிருந்த விலையிலிருந்து 40 - 50% வரை கட்டணம் குறைவாக இருந்ததால், அதன் மூலமாகவே அறையை புக்கிங் செய்தேன். ஆன்லைனில் குறைந்த கட்டணத்தில் அறைகள் கிடைக்க, ஏன் அதிக கட்டணம் தரவேண்டும்?

- ஹரி, சென்னை

சூப்பர் வேலை... நல்ல சம்பளம்!

நான் எம்.காம் முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இணையதளங்கள் மூலம் சில வேலைகளுக்கு விண்ணப்பித்து வந்தேன். குறிப்பிட்ட ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, மாதம் ரூ.25,000 சம்பளம் என்றார்கள். பிறகு அன்றைய தினமே அந்த நிறுவனத்துக்கு என்னை இன்டர்வியூவுக்கு அனுப்பினார்கள். அடுத்த நாளே நீங்கள் செலக்ட் ஆகிவிட்டீர்கள் என்று சொல்லி, வேலை பெற்றுத் தந்ததற்கான கட்டணமாக ரூ.20,000 கேட்டார்கள். நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி பணம் செலுத்தினேன்.

"காணாமல்போனது செல்போன் மட்டுமல்ல..." - உங்களுக்கும் உதவலாம், இந்த அனுபவங்கள்!

அடுத்த நாளிலிருந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். மூன்று நாள்கள் அலுவலத்தில் வேலை பார்க்கச் சொன்னவர்கள், பிறகு லைனுக்குப் போக வேண்டும் எனச் சொல்லி மார்க்கெட்டிங் அனுப்பினார்கள். அக்கவுன்டன்ட் வேலைக்கு எனச் சேர்த்துவிட்டு, அவர்கள் வேறு என்னவெல்லாமோ வேலைக் கொடுத்தார்கள். வேலை பெற்றுத்தந்த அலுவலகத்தில் கேட்டால், அவர்கள் என் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பதாக இல்லை. நான் வேலை பிடிக்காமல் ஊருக்கே போய்விட்டேன். வேலையின் தன்மை குறித்துச் சரியாக விசாரிப்பது அவசியம்.

- கதிரேசன், கோவில்பட்டி

விலையை வைத்து முடிவு செய்யாதீர்!

எங்கள் பகுதியிலுள்ள பாத்திரக் கடைக்குச் சென்று, "குறிப்பிட்ட ஒரு கம்பெனியின் குக்கர் உள்ளதா" எனக் கேட்டேன். கடையில் இருந்த ஒரு பெண், வேறு ஒரு குக்கரைக் காட்டி, "இது சூப்பராக இருக்கும்" என்றார்.

"காணாமல்போனது செல்போன் மட்டுமல்ல..." - உங்களுக்கும் உதவலாம், இந்த அனுபவங்கள்!

அந்தக் கம்பெனியை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால், விலை குறைவாக இருந்தது. அதை வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குள் அந்த குக்கரை வாங்கவைத்து விட்டார்கள். இரண்டே மாதத்தில் அது பழுதானது. கடைக்குச் சென்றுகேட்டால், அன்று உங்களிடம் பேசியவர், கம்பெனிக்காரர். நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட பொருளை வாங்கச் சொல்வதில்லை என்றார்கள். விலையைப் பார்த்து ஏமாந்துவிட்டேன்!

- மகேஸ்வரி, திருச்சி

> நாணயம் விகடன் முந்தைய இதழ்களில் வெளியான வாசகர்களின் அனுபவக் குறிப்புகள் இவை. இந்த வார பகிர்வுகளை வாசிக்க > என் பணம் என் அனுபவம்! https://www.vikatan.com/news/general-news/readers-financial-experience-14

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |