Published:Updated:

பீட்டா: விலங்குகளை துன்புறுத்தாத புதிய வீகன் ஆடை, அணிகலன்கள்! வடிவமைத்த மோனிகா, கரிஷ்மா...

மோனிகா, கரிஷ்மா
News
மோனிகா, கரிஷ்மா

``எவ்வித உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல், உயிர் கொடுமைகளற்ற ஆடம்பர உடைகளை நாங்கள் அர்ப்பணிப்புடன் வடிவமைத்துள்ளோம். PETA வுடன் இணைந்து செய்த இந்த வடிவமைப்பு, இந்த வீகன் ஆடம்பர ஆடை அணிகலன்களை உருவாக்க எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது...

பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான மோனிகா மற்றும் கரிஷ்மா இருவரும் ஆடை வடிவமைப்பில் எப்போதும் புதுவிதமான முயற்சிகளை செய்துகொண்டிருப்பவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து, இந்திஇரககமலங்கள், பாடகர்கள் எனப் பல முக்கிய பிரபலங்களின் திருமணத்துக்கு புதுவிதமான ஆடைகளை வடிவமைத்துத் தருபவர்கள். சமீபத்தில் நடைபெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்துக்குக்கூட இவர்கள் வடிவமைத்த ஆடைகள் இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டும், பகிரப்பட்டும் வந்தன.

எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட வீகன் கலெக்சன்
எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட வீகன் கலெக்சன்

பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான மோனிகா மற்றும் கரிஷ்மா இருவரும் இணைந்து தங்களின் புகழ்பெற்ற பிரைடல் உடைகள் பிராண்டான ஜேட் (Jade) மூலம் தற்போது மேட் பார் லவ் ( Made For Love) என்ற தலைப்பில் தங்களின் புதிய வீகன் ஆடை, அணிகலன் வடிவமைப்பு தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.

எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட வீகன் கலெக்சன்
எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட வீகன் கலெக்சன்

நாடெங்கிலும் உள்ள கைவினைப் பொருள்கள் கடைகளில் காணப்படும் பழங்கால பாணியான, வெள்ளி கைப்பிடியை இவர்கள் வடிவமைத்த தங்கள் கைவினைப் பொருள்கள் மற்றும் பைகளில் மறு வடிவமைப்பு செய்துள்ளனர். இதை PETA-வின் ஒத்துழைப்புடன் இணைந்து செய்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பேசியுள்ள ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான மோனிகா ஷா, ``எவ்வித உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல், உயிர் கொடுமைகளற்ற ஆடம்பர உடைகளை நாங்கள் அர்ப்பணிப்புடன் வடிவமைத்துள்ளோம். PETA வுடன் இணைந்து செய்த இந்த வடிவமைப்பு, இந்த வீகன் ஆடம்பர ஆடை அணிகலன்களை உருவாக்க எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கைவினைப்பொருளும் விண்டேஜ் ரெகாலியா மற்றும் கையால் செய்யப்பட்ட ஆடம்பர பொருள்களின் மீதான அழியாத ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது."

எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட வீகன் கலெக்சன்
எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட வீகன் கலெக்சன்

புதிய கலெக்ஷ்ன்களை செய்ய வீகன் தோல், இயற்கையான துணிகள், சாயங்கள் மற்றும் கைவினைத்திறன், பாரம்பர்ய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருள்களை உருவாக்கி இருக்கின்றனர். ``மீனாடியர்களில் சில மீனாகாரி வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. மற்றவை மீனாடியர்கள் 18 கிராம் தங்கம் முலாம் பூசப்பட்டு உருவாக்கப்படுகின்றன. இந்த புதிய கலெக்ஷ்ன் தொகுப்பில் இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பூர்வீகமான பித்தளை மற்றும் வெள்ளிப் பொருள்களைச் செய்யும் பணியாளர்களின் கலைப் படைப்புகளும் இந்த கலெக்சன் தொகுப்பில் உள்ளன.

மேலும் இந்த வீகன் கலெக்சன் தொகுப்பில் எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட பைகள், உறைகள், டசல் பைகள், மியூல் காலணிகள் (Mules), கைவளையல்களும் இந்த வீகன் கலெக்சன் தொகுப்பு கொண்டுள்ளது. இந்த வீகன் கலெக்சன் தொகுப்பு என்பது நம்மோடும், உலகத்தோடும் பரந்த அளவில் இணக்கமாக வாழ்வது பற்றியது. ஆன்லைனில் கிடைக்கும். இந்த வீகன் கைவினைப்பொருள்களின் மொத்த விலை ரூபாய் 4,400 ஆகும்" என்றார்.