Published:Updated:

மும்பை: மாட்டுவண்டிப் போட்டியில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு!

சேதமடைந்த கார்
News
சேதமடைந்த கார்

படங்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு போன்று ஒவ்வொரு முறையும் மறைந்திருந்து வெளியில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு மீண்டும் மறைந்துகொள்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

மும்பை: மாட்டுவண்டிப் போட்டியில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு!

படங்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு போன்று ஒவ்வொரு முறையும் மறைந்திருந்து வெளியில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு மீண்டும் மறைந்துகொள்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Published:Updated:
சேதமடைந்த கார்
News
சேதமடைந்த கார்

மகாராஷ்டிராவில் கிராமங்களில் ஆங்காங்கே மாட்டு வண்டிப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாட்டு வண்டிப் போட்டிகள் சட்டவிரோதமாக நடத்தப்படுகின்றன. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் என்ற இடத்தில் நேற்று மாட்டு வண்டிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இப்போட்டியில் கலந்துகொண்ட இரு பிரிவினர் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்தது. மாட்டு வண்டி போட்டியின்போது இந்த மோதல் மீண்டும் வெடித்தது.

ரோட்டில் துப்பாக்கிச்சூடு
ரோட்டில் துப்பாக்கிச்சூடு

மாலையில் இருதரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டனர். நடுத்தெருவில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இரு தரப்பினரும் 15 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.

பட்டப்பகலில் நடந்த இத்துப்பாக்கிச்சூட்டை கண்டு அந்த வழியாக வந்த பாதசாரிகள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். படங்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு போன்று ஒவ்வொரு முறையும் மறைந்திருந்து வெளியில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு மீண்டும் மறைந்துகொள்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

சாலையில் வாகனங்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருக்கிறது. இத்துப்பாக்கிச்சூட்டில் யாரும் காயம் அடையவில்லை. ஆனால், ஒரு கும்பலின் கார் ஒன்று துப்பாக்கிச்சூட்டில் சேதம் அடைந்தது.

மும்பை: மாட்டுவண்டிப் போட்டியில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு!

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சண்டையால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக்கு லைலென்ஸ் பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அம்பர்நாத் சிவாஜி நகர் போலீஸார் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை இதற்காக ஆய்வு செய்து வருகின்றனர்.