நெடுவாசல் போராட்டம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் - திருச்சி சிவா பேச்சு

Neduvsal Issue will have an impact in Parliament

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 17-வது நாளாக தொடர்கிறது. போராடும் மக்களுக்கு ஆதரவளித்து திருச்சி சிவா எம்பி பேசுகையில், "நான் நாடாளுமன்றம் செல்ல வாக்களித்த ஊர்களில் இதுவும் ஒன்று. அதற்கு நன்றிக் கடன் செய்யும் விதமாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். அந்த உணர்வோடுதான் கடந்த சில நாள்களுக்கு முன், மத்திய அமைச்சரை சந்தித்து இந்த திட்டத்தை கைவிடக்கோரிக்கை வைத்தோம்.

மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடும் வரை நீங்கள் போராட்டத்தை தொடருங்கள். வரும் 9-ம்தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் அவை கூடியதும் இந்தக் கோரிக்கையை முதலில் வைத்து பேச உள்ளோம். இந்தியா ஒரு விவசாய நாடு, ஆனால் அந்த விவசாயம் அழிவுப்பாதையை நோக்கிப் போகிறது. விவசாயிகளை மதிக்காத எந்த நாடும் முன்னேறியதில்லை. இந்தப் போராட்டம் இன்று தமிழகம் திரும்பி பார்ப்பது போல இந்தியாவும் திரும்பிப் பார்க்கும். காசு பணம் வேண்டாம் காடு, மாடு, வயல் வேண்டிய இந்த போராட்டம், தங்கள் நிலத்தையும் அடுத்த தலைமுறையையும் காத்திட போராடும் உங்களை நான் வணங்குகிறேன். அதேபோல் தமிழக அரசு, இந்த திட்டத்தைக் கைவிட அழுத்தம் கொடுக்க வேண்டும். வாழ்த்தி அனுப்புங்கள், வரும் நாடாளுமன்றத்தில் நெடுவாசல் பிரச்னை எதிரொலிக்கும், வெற்றியோடு உங்களை சந்திக்கிறேன். போராட்டம் வெற்றி பெறும்" என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!