Published:Updated:

மனைப் பிரிவுகளைக் கையகப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிப்பு!நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?

வீட்டு மனை
News
வீட்டு மனை

அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஓ.எஸ்.ஆர், ஆக ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்காமல் மனையாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்கள் விஷயத்தில், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனைப் பிரிவுகளைக் கையகப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிப்பு!நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?

அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஓ.எஸ்.ஆர், ஆக ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்காமல் மனையாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்கள் விஷயத்தில், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Published:Updated:
வீட்டு மனை
News
வீட்டு மனை

வளர்ச்சித் திட்டங்களுக்காக மனைப் பிரிவுகளைக் கையகப்படுத்தும்போது, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள் தொடர்பாக, புதிய விதிமுறைகளை, நில நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. தமிழக நில நிர்வாகத்துறை ஆணையர் சார்பில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் குறிப்பிட்டதாவது,

முறையாக உள்ளாட்சி பெயருக்கு ஒப்படைக்கப்பட்ட மனைப் பிரிவில் இருந்து, கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, முழுமையான இழப்பீடு வழங்கலாம்.

மனை ( மாதிரி படம் )
மனை ( மாதிரி படம் )
vikatan

இத்தகைய மனைப் பிரிவுகளில், ஓ.எஸ்.ஆர் எனும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அதற்கு இழப்பீடு வழங்க வேண்டாம்.

அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஓ.எஸ்.ஆர் ஆக ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்காமல் மனையாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்கள் விஷயத்தில், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலத்தை இழப்பீடு ஏதும் இன்றி, சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்க, வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில், உள்ளாட்சியிடம் ஓ.எஸ்.ஆர் நிலம் ஒப்படைக்கப்படாத நிலையில், மனையின் உரிமையாளருக்கு முழு இழப்பீடு வழங்கலாம்.

வரன்முறை செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், உள்ளாட்சியிடம் ஒப்படைக்கப்படாமல் இருக்கும் சாலை, ஓ.எஸ்.ஆருக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை இழப்பீடு இன்றி கையகப்படுத்தலாம். வரன்முறை செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில் ஓ.எஸ்.ஆர் ஆக ஒதுக்கப்பட்டு, தனியார் பெயரில் மனையாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களை, இழப்பீடு இன்றி கையகப்படுத்தலாம்.

மனைப் பிரிவுகளைக் கையகப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிப்பு!நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?
Esin Tellioglu

அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்டதைவிட, 33.33 சதவிகிதம் குறைவாக இழப்பீடு வழங்கலாம்.

அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், ஓ.எஸ்.ஆர் ஆக ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்களை இழப்பீடு இன்றி, வருவாய்த்துறை வாயிலாகப் பெறலாம்.

அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில் ஓ.எஸ்.ஆர் ஆக ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்காமல் மனையாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களை இழப்பீடு இன்றி கையகப் படுத்தலாம்; மனை மேம்பாட்டாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், பள்ளிகள், மருத்துவமனை, சமுதாயக்கூடம் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு. உரிய இழப்பீடு வழங்கலாம். இதில், ஓ.எஸ்.ஆர் ஒப்படைக்கப்படாத மனைப்பிரிவு எனில் இழப்பீட்டில் 33.33 சதவிகித தொகை குறைக்கப்பட வேண்டும்.

இந்தச் சுற்றறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதில் சந்தேகம் எழுந்தால், அது குறித்து நிலம் கையகப்படுத்தும் அலுவலர்கள், நில நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி தெளிவு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.