Published:Updated:

ஆர்யன் கைது; போலி சாதிச் சான்றிதழ் குற்றச்சாட்டு - நெருக்கடியில் சமீர் வான்கடே!

சமீர் வான்கடே
News
சமீர் வான்கடே

ஆர்யன் கானைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் சாதிச் சான்றிதழைத் தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மும்பையில் அக்டோபர் மாதம், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான குழு கைதுசெய்தது. இந்த கைதைத் தொடர்ந்து சமீர் வான்கடே மீது மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்தார். பணம் பறிக்கவே ஆர்யன் கானைக் கைதுசெய்ததாகவும், போலி சாதிச் சான்றிதழைத் தாக்கல் செய்து தாழ்த்தப்பட்டவர் என்ற பிரிவில் வேலைவாய்ப்பு பெற்றதாகவும் சமீர் வான்கடே மீது நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சமீர் வான்கடேவிடம் செல்லுபடியாகும் சாதிச் சான்றிதழைத் தாக்கல் செய்யும்படி மகாராஷ்டிரா சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டி கேட்டுக்கொண்டது. ஆனால் கமிட்டி முன்பு ஆஜரான சமீர் வான்கடே வழக்கறிஞர் ராமச்சந்திர ராணே, தங்களிடம் செல்லுபடியாகும் சாதிச் சான்றிதழ் தற்போது இல்லை என்றும், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய, கூடுதல் அவகாசம் தேவை என்றும் கமிட்டியிடம் கேட்டுக்கொண்டார்.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

விசாரணையின்போது, சமீர் வான்கடே மீது புகார் செய்த அமைச்சர் நவாப் மாலிக், அசோக் காம்ப்ளே ஆகியோரும் கலந்துகொண்டனர். அடுத்தகட்ட விசாரணை வரும் 18-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. அசோக் காம்ப்ளே சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நிதின் இது குறித்துக் கூறுகையில், ``சமீர் வான்கடே தன்னிடம் செல்லுபடியாகும் சாதிச் சான்றிதழ் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அவற்றைத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சமீர் வான்கடே
சமீர் வான்கடே

மாநில அரசு சாதிச் சான்றிதழ் கேட்டிருப்பதால் சமீர் வான்கடேவுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சாதிச் சான்றிதழைத் தாக்கல் செய்யாதபட்சத்தில் போலி சாதிச் சான்றிதழ் வாங்கி வேலையில் சேர்ந்தார் என்று கூறி சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. சமீர் வான்கடே பிறப்பால் முஸ்லிம் என்றும், ஆனால் தன்னை எஸ்.சி என்று கூறி சாதிச் சான்றிதழ் வாங்கியதாக நவாப் மாலிக் தெரிவித்திருக்கிறார்.