வெளியிடப்பட்ட நேரம்: 09:19 (28/10/2012)

கடைசி தொடர்பு:09:19 (28/10/2012)

விரைவில் உணவு உறுதி சட்டம்!: ப.சிதம்பரம் பேச்சு

கோவை: உணவு உறுதி சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்

கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில் 'சோனியா காந்தியின் எண்ணத்தில் உதித்த உணவு உறுதி சட்டம் விரைவில் வர போகிறது. நம்முடைய உணவை நம்மால் உறுதி செய்ய முடிகிறது. உணவு உறுதி சட்டத்தை நாடாளுமன்றத்திலே நிறைவேற்றி கண்டிப்பாக அதற்கு தேவையான நிதியை நிச்சயமாக ஒதுக்குவேன். இந்தியாவில் உள்ள மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் 25 கிலோ அல்லது 35 கிலோ அரிசி அல்லது கோதுமை கொடுக்க வேண்டும் என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் நமது அரசு அதை கண்டிப்பாக செயல்படுத்தும்' என்று கூறியுள்ளார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்