காமராஜர் பெயரை சொல்லி ஆட்சியை பிடிக்க முடியாதா?

சென்னை காமராஜர் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம் “காமராஜர் பெயரை சொல்லி இனி ஆட்சியை பிடிக்க முடியாது. கருணாநிதி ஜெயலலிதா போல் நடப்பு தலைவர்களை முன்னிறுத்தி மக்களை சந்திக்க வேண்டும். பழம்பெருமைகளை இனி பேசி ஆட்சிக்கு வரமுடியாது" எனக் கூறியது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து காமராஜரைப்பற்றி காங்கிரஸ் கட்சியில் இனி யாராவது விமர்சனம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து உங்களுக்கு...

அ) ஏற்புடையது

அல்லது

ஆ) ஏற்புடையதல்ல

இரண்டில் எதுவானாலும் உங்கள் கருத்தை முன்வைத்து விவாதிக்கலாம். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!