குறைந்து வரும் குழந்தைகளின் நட்பு வட்டாரம் - ஆராய்ச்சி முடிவு!

சமீபத்தில் சுவீடனில் எடுக்கப்பட்ட ஆய்வில் குழந்தைகளின் நட்பு வட்டாரம் குறைந்து வருவதாகவும், அதுவும் நிஜ வாழ்க்கையில் குறைவான நண்பர்களையே கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. குழந்தைகள் அதிக அளவு நண்பர்களை சமூக வலைதளங்கள் மூலமாகவே பெற்று வருகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த ஆய்வுக்காக 11, 13, 15 வயதுக்கு உட்பட்ட 66,000 குழந்தைகள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இதில் 81% மேற்பட்ட குழந்தைகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாயிலாகவே அதிக நண்பர்களை பெற்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. 2010-ம் ஆண்டில் மட்டும் வாரத்தில் மூன்று நாட்கள் அதிக அளவு சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இது குழந்தைகள் ஆரோக்கியமான சூழலை காட்டவில்லை என்கிறார்கள் சுவீடன் ஆராய்ச்சியாளர்கள். முகம் தெரியாத நட்புகளில் தான் குழந்தைகள் அதிகம் நாட்டம் கொண்டுள்ளார்கள் எனவும், சுற்றியுள்ள அறிமுகமான நண்பர்களிடம் அவர்கள் நெருங்கிப் பழகுவது குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!