வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (03/12/2016)

கடைசி தொடர்பு:11:02 (03/12/2016)

வறுமையால் 12 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை

பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை பெற்றோர் பணத்துக்காக விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மிதுன்- ரேஷ்மா தம்பதிக்கு பிறந்த, 12 நாட்களே ஆன  பச்சிளங்குழந்தையை விற்றுள்ளனர். 

பச்சிளங்குழந்தையின், தந்தையை கைது செய்து போலீஸார் விசாரித்தபோது, வறுமை காரணமாகவே குழந்தையை விற்றதாக ஒப்புக் கொண்டார். ''ஏற்கெனவே, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், மேலும் ஒரு குழந்தை பிறந்துவிட்டதால் காப்பாற்றுவது கஷ்டமாக இருக்கும் என்பதால் தான் தங்கள் குழந்தையை விற்கும் நிலை அவர்களுக்கு உருவாகிவிட்டது'' என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, 12 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க