குழந்தைகளை Day Care -ல் சேர்க்குமுன் கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்!

குழந்தைகளை

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள உறவினர்கள் இல்லாத நிலையில் குழந்தைகளை டே கேர்- ல் விட்டுச்செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமிருக்கின்றன. பிள்ளைகள் Day Care ல் பத்திரமாக இருக்க பெற்றோர்கள் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

இதற்காக பல இடங்களில் முளைத்திருக்கும் டே கேரில் பிள்ளைகளைச் சேர்க்கும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார் சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த யூரோ கிட்ஸ் டே கேர் (euro kids) பள்ளியின் இயக்குநரான ஐஸ்வர்யா.

1. உங்கள் பிள்ளையை டே கேரில் சேர்க்கும்போது, குழந்தை அதிகம் விரும்பும் மற்றும் பிடிக்காத விஷயங்களை, அங்கிருக்கும் காப்பாளரிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. இதன் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாத உணவு வகைகள் மற்றும் இதர விஷயங்களை வற்புறுத்திக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், டே கேர் குழந்தையை பயமுறுத்தாமல் பாதுகாப்புக்கான இடம் என்கிற எண்ணமும் அந்தக் குழந்தைக்கு வருவதற்கு இது உதவும். 

2. எந்த நேரத்தில் குழந்தையை டே கேரில் விடமுடியும், எந்த நேரத்தில் அழைத்து வர முடியும் என்பதை சரியாக முடிவெடுத்தப் பின்னர், அதற்கு ஏற்ற டே கேரில் சேர்ப்பது நல்லது. இதன் மூலம் குழந்தையை காக்க வைக்காமல் அழைத்துச் செல்லவும், இதர பிரச்னைகளில் இருந்தும் தவிர்க்கலாம்.

3. பிள்ளைகளுக்கு, பொதுவாக வீட்டில் கொடுக்கப்படும் உணவு வகைகளையே டே கேருக்கு கொடுத்தனுப்புங்கள். குழந்தை பழகட்டும் என்பதற்காக புதிய வகை உணவுகளைக் கொடுத்து, அதனால் குழந்தைக்கு அலர்ஜி போன்ற ஏதேனும் உபாதைகள் வந்தால் அதற்கு டே கேர் காரணமா, கொடுத்தனுப்பிய உணவா என்று கலங்கி, குழப்பமடைவதைத் தவிர்க்கலாம்.

குழந்தைகள் Day Care


4. டே கேரில் விடும்போது, அன்றைய தினத்தில் உங்கள் வேலையின் நேரம் முன், பின் ஆகும் என்றால் அதை, காப்பாளரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவதே சரியானது. 
 
5. டே கேரில் குழந்தையைச் சேர்க்க செல்லும்போதே, மாதக் கட்டணமா அல்லது வருடக் கட்டணமா என்பதையும் நன்கு விசாரித்துவிட்டுச் சேர்ப்பது நல்லது. உங்களுடைய நண்பர்கள் மற்றும் ஏற்கெனவே டே கேரில் குழந்தையை சேர்த்தப் பெற்றோர்கள் போன்றவர்களை விசாரிப்பது நல்லது. 

6. டே கேரில் சேர்க்கும் முன்னர் குழந்தை உறங்கும் ரூம் முதல் கழிவறை வரை அனைத்து இடங்களின் சுகாதராம் குறித்து கேட்டறிந்தும், நேரில் ஆய்வு செய்தும் தெரிந்துகொள்வது, உங்கள் குழந்தையின் உடல் நலத்தைக் காக்க உதவும். மேலும், உடல் நலக் கோளாறுகளில் இருந்தும் தவிர்க்க முடியும்.

குழந்தைகள் டே கேர்7. டே கேரில் குழந்தைகளை விடும்போது அவர்கள் தூங்குவதற்கான பெட்ஷீட் முதல் பால் பாட்டில் வரை நீங்களே கொடுத்து தினமும் வாங்கி துவைத்து, கழுவி கொடுத்து அனுப்புவது நல்லது. சில டே கேரில் பெட்ஷீட், உணவு எல்லாம் பொதுவாக வழங்கப்படும். சிறு வயதில் இது போன்ற நுண்ணிய விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. இது மிக மிக முக்கியம் ஆகும்.

8. குழந்தைகளை அழைத்து வருபவர் மற்றும் விசிட்டரின் பெயரை, காப்பக பதிவில் பதிவிட வைப்பது அவசியம் இது குழந்தையின் பாதுகாப்புக்குப் பெரிதும் உதவும்'. இவ்வாறு குழந்தைகளை டே கேரில் சேர்ப்பதற்கான விஷயங்களாக ஐஸ்வர்யா குறிப்பிடுகிறார்.

- வே. கிருஷ்ணவேணி

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!