குழந்தைகள் டி.வி பார்ப்பதைக் குறைப்பது இவ்வளவு ஈஸியா? #MustReadParents | Easy ways to cut down your Child's Screen Time

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (09/01/2017)

கடைசி தொடர்பு:17:49 (09/01/2017)

குழந்தைகள் டி.வி பார்ப்பதைக் குறைப்பது இவ்வளவு ஈஸியா? #MustReadParents

டிவி பார்க்கும் அண்ணன் தங்கை

'தோ ஒரு நாள் என் குழந்தை அழுதானேனு டிவி பார்க்கவிட்டேன். அது என்னடானா... இப்ப தொடர்கதையா மாறி, எனக்கும் என் கணவருக்கும் தினமும் சண்டை வர்றதே குழந்தைகள் டிவி பார்க்கிறதை வைச்சுதான்" என்பது போன்ற உரையாடல்கள், குமுறல்கள் உங்கள் வீடுகளிலும் எழுகிறதா... அப்படியெனில் உங்களுக்காகதான் இந்த கட்டுரை.

'படிப்படியாக டி.வி பார்க்கும் பழக்கத்தை எப்படி குறைக்கலாம். அதில் இருந்து அவர்களுடைய கற்பனைத் திறன்களை மழுங்கடிக்காமல்குழந்தைகள் நல பயிற்சியாளர் வேள் பாரி வெளிக்கொணர்வது எப்படி?' என்பது பற்றி ஆலோசனைகள் தருகிறார் குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை பயிற்சி பட்டறைகள் நடத்தும் வேள்பாரி.

''குழந்தைகள் ஏன் டி.வி பார்க்கிறார்கள்? ஏனெனில் அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது. அப்படியெனில் உங்கள் வீட்டுச் சூழலை அவர்களுக்கு பிடித்தது போல மாற்றுங்கள். குழந்தைகள் டி.வி பார்க்காமல் இருக்க வேண்டும் என்று பெற்றோரான நீங்கள் நினைத்தால், முதலில் நீங்கள் டி.வி பார்க்கக் கூடாது.

இன்றில் இருந்து ஒரு வாரத்துக்கு டி.வி பார்க்கின்ற நேரத்தை நிறுத்துங்கள்; அல்லது டி.வி கனெக்‌ஷனை கட் செய்து விடுங்கள். இப்படி செய்வதற்கு முன்பு குழந்தைகளுடன் சேர்ந்து சில டி.வி பார்க்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்பதை திட்டமிடுங்கள். அவற்றையும் உங்கள் பார்வையில் பார்க்காமல், குழந்தைகளிடம் கேட்டு தீர்மானியுங்கள்.

கதை சொல்லுதல், அவர்களுக்கு பிடித்த ஸ்பைடர் மேன் அல்லது பார்ஃபி டாலுடன் சேர்ந்து நீங்களும் விளையாடுவது, கண்ணாமூச்சி, கிராப்ட் வொர்க் செய்தல், பூங்காவுக்கு சென்று விளையாடுவது, ரூம் கிளீனிங், பாரம்பரிய விளையாட்டுகள், கதை சொல்வது, புத்தகம் படிப்பது, நூலகம் அழைத்துச் செல்வது, கார்டனிங், சமையல்... என வெரைட்டியாக அவர்களுக்கு பிடித்தது போல திட்டமிடுங்கள். மாலை நேரத்தில் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள். குழு விளையாட்டு மூலம் குழந்தைகளின் பல திறன்கள் மேம்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். படிப்பினால் அவர்களது குட்டி மூளைக்குள் கொட்டிக் கிடக்கும் டென்ஷன்களும் காலியாகிவிடும்.  

நிச்சயம் டி.வி இல்லாத ஒரு வார கால அனுபவம், உங்கள் வீட்டையே நல்ல மாற்றத்துக்கு உட்படுத்தியிருக்கும். தேங்கிக் கிடந்த வேலைகள் முடிந்திருக்கும். வீடு எல்லோருக்கும் பிடித்த இடமாக மாறியிருக்கும். டிவி இல்லாமலும் ஜாலியாக இருக்க குழந்தைகள் பழகியிருப்பார்கள். டி.வி பார்க்காமல் குழந்தைகள் இருக்க பழகிக் கொண்டால், அதை அப்படியே தொடருங்கள். இல்லையென்றால் சாப்பிடும் சிறிது நேரம் மட்டும் என சொல்லி அதன்படி நடக்க குழந்தைகளை பழக்கலாம். குழந்தைகளோடு அமர்ந்து அந்த நேரத்தில் மட்டும் பெற்றோரும் டிவி பார்க்கலாம். மற்ற நேரங்களில் குழந்தைகள் தங்களது பணிகளை செய்து கொள்ள உதவியாக இருக்க வேண்டும். டிவி பார்க்கும் கூடுதல் நேரத்தை கட் செய்து விட்டு அந்த நேரத்தில் படி படி என திணிப்பதும் அவர்களை வெறுப்பில் தள்ளும். டிவி பார்க்காத நேரத்தில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய பழக்கப்படுத்தலாம். பெற்றோர் மாறினால் குழந்தைகளும் மாறுவார்கள். வீட்டில் உள்ள அனைவருமே குழந்தைகளுக்காக தாங்கள் டிவி நேரத்தை தியாகம் செய்ய தயாராகுங்கள். குழந்தைகள் உலகம் குதூகலம் ஆகும்’’ என்கிறார் வேள்பாரி. 

                                                                        - யாழ் ஸ்ரீதேவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close