'நான் டாக்டர் ஆகணும்... அப்பா...' தந்தையிடம் சிகிச்சைக்குப் பணம் அளிக்கக் கேட்டு மன்றாடிய 13 வயது சிறுமியின் குரல்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 13 வயதுச் சிறுமி, தனது சிகிச்சைப் பணத்துக்காகத் தந்தையிடம் மன்றாடிக் கேட்ட வீடியோ தற்போது பார்ப்பவர்களைக் கண்ணீர் சிந்த வைக்கிறது. 

 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சாய் ஶ்ரீயின் அம்மாவும் அவரது அப்பாவும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்துப் பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சாய் ஶ்ரீ, அவருடைய அம்மா சுமஶ்ரீயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சாய் ஶ்ரீக்கு எலும்புப் புற்றுநோய் மஜ்சையில் இருந்தது கடந்த ஆகஸ்டு மாதம் தெரியவந்தது. இதனையடுத்து அவர் புற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்துவந்துள்ளார். மருத்துவர்கள் எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் சாய் ஶ்ரீயைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தனர்.

சிகிச்சைக்கு 40 லட்ச ரூபாய் வரை தேவைப்பட்டுள்ளது. தாய் சுமஶ்ரீயிடம் அவ்வளவு பணம் இல்லாத நிலையில் அவர், தங்களுடைய வீட்டை விற்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சாய் ஶ்ரீயின் அப்பா ஷெட்டி சிவகுமார், அரசியல்வாதியின் உதவியுடன் வீட்டை விற்கவிடாமல் தொடர்ச்சியாகத் தடை ஏற்படுத்தியுள்ளார். சுமஶ்ரீயால் பணம் தயார் செய்ய முடியாமல் போனதால் சிகிச்சை கிடைக்கப் பெறாமல் சாய் ஶ்ரீ கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு ஆந்திர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சாய் ஶ்ரீ தான் இறப்பதற்கு முன்னதாக தனது தந்தையிடம் சிகிச்சைக்குப் பணம் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது புற்றுநோயால் கை, கால்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்டுகிறார். தெலுங்கில் சாய் ஶ்ரீ பேசியிருக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் அழுகை நிறைந்த சாய் ஶ்ரீயின் வரிகள்...

'அப்பா, உங்ககிட்ட பணம் இல்லன்னு நீங்க சொல்றீங்க... ஆனா நம்மகிட்ட இந்த வீடு இருக்கு. தயவுசெஞ்சு அந்த வீட்ட வித்து, எனக்குச் சிகிச்சை பண்ண பணம் கொடுங்க... அப்டி நான், சிகிச்சை பண்லன்னா, நான் ரொம்ப நாள் வாழ முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க... நான் ஸ்கூலுக்குப் போய் ஒரு மாசம் ஆகுது. நான் என் நண்பர்கள் கூட விளையாடனும்... நான் ஸ்கூலுக்குப் போகனும்... நான் பரிட்சை எழுதனும்... நான் டாக்டர் ஆகனும்...'
 

 https://www.facebook.com/thevoiceraiser/videos/1044883232323025/

Do you like the story?

Please Appreciate the Author by clapping!