Published:Updated:

தூத்துக்குடி: பொங்கல் விற்பனைக்குத் தயாரான பனை ஓலைகள்; மகிழ்ச்சியில் பனைத் தொழிலாளர்கள்!

காய வைக்கப்பட்ட பனை ஓலைகள்
News
காய வைக்கப்பட்ட பனை ஓலைகள்

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைப்பதற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பனை ஓலையை காய வைத்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர் பனைத் தொழிலாளர்கள்.

தூத்துக்குடி: பொங்கல் விற்பனைக்குத் தயாரான பனை ஓலைகள்; மகிழ்ச்சியில் பனைத் தொழிலாளர்கள்!

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைப்பதற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பனை ஓலையை காய வைத்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர் பனைத் தொழிலாளர்கள்.

Published:Updated:
காய வைக்கப்பட்ட பனை ஓலைகள்
News
காய வைக்கப்பட்ட பனை ஓலைகள்

தமிழகத்தின்  மாநில மரமாக `பனை மரம்’ அங்கீகரிக்கப்பட்டு போற்றப்படுகிறது. உச்சி முதல் அடி வரை இம்மரத்தின் அனைத்துப் பாகங்களும் பலன் அளிப்பதால்தான் பனையை `கற்பகத்தரு’ என்கிறார்கள். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான பனைமரங்கள், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்தான் காணப்படுகின்றன. தற்போது எரிவாயு இணைப்பு புழக்கத்தில் வந்த பிறகு, தமிழகத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் எரிவாயு அடுப்பில் பொங்கல் வைத்து  கொண்டாடி வருகிறார்கள்.  

பனை ஓலை
பனை ஓலை

ஆனால், தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளின் முற்றத்தில் மண் அடுப்பில் மண் பானையில் அரிசியிட்டு, பனை ஓலையை எரிபொருளாக எரித்து பொங்கல் வைக்கும் பாரம்பர்ய முறைப்படி தைப் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பனை மரங்களில் இருந்து ஓலைகளை வெட்டி காய வைத்து கட்டாகக் கட்டி வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர் பனைத்தொழிலாளர்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அந்தோணியார்புரம், திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி, சாத்தான்குளம், தட்டார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் பனை மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகளிலுள்ள பனைத் தொழிலாளர்கள் பனைமரங்களில் ஓலைகளை வெட்டி வெயிலில் காய வைத்து கட்டுகளாகக் கட்டி விற்பனைக்கு அனுப்பி வருகிறார்கள்.  

பனை ஓலை
பனை ஓலை

அந்தோணியார்புரம் பகுதியில் பனை ஓலைகளை காய வைத்துக்கொண்டிருந்த பனைத்தொழிலாளி எட்வர்டிடம் பேசினோம், ``எங்க ஊர்ல 10 வருஷத்துக்கு முன்னால வரைக்கும் 100 பேர் வரை பனையேற்றத் தொழிலை கவனிச்சுட்டு வந்தோம். பனைமரங்களோட எண்ணிக்கை குறைஞ்சதுனாலயும், பனைத்தொழில் நலிவடைய ஆரம்பிச்சதுனாலயும் இப்போ 10 பேர்தான் பனையேற்றத் தொழில்ல ஈடுபடுறோம்.

வருஷத்துக்கு 6 மாசம்தான் சீஸன். மீதி 6 மாசம் வேற கூலி வேலைக்குதான் போகணும். தைப் பொங்கல் பண்டிகைக்கு பாரம்பர்ய முறைப்படி பனை ஓலையை எரிபொருளா வச்சுதான் பொங்கலிடுவாங்க. அதனால, ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை முடிஞ்சதுமே பனை ஓலைகளை வெட்டி காய வைக்க ஆரம்பிச்சுடுவோம். ஒரு மரத்துல 5 ஓலை வரைக்கும் வெட்டுவோம்.

காய வைக்கப்படும் ஓலைகள்
காய வைக்கப்படும் ஓலைகள்

நல்ல வெயில் அடிச்சா 3  நாள்ல ஓலை காய்ஞ்சுடும். 5 ஓலைகளை ஒரு கட்டுன்னு கட்டி விற்பனைக்கு அனுப்புவோம். ஒரு ஓலை 15 ரூபாய்க்கு விலை போகுது. ஆனா, வியாபாரிங்க 30 முதல் 35 ரூபாய் வரைக்கும் விலை வச்சு ஒவ்வொரு பகுதியிலயும் விற்பனை செய்யுவாங்க. நாமளே நேரடியா ஓலையை விற்றா கூடுதலா வருமானம் கிடைக்கும். இந்த ஓலை விற்பனையால கிடைக்குற வருமானம் கொஞ்சம் கைகொடுக்குது” என்றார்.