Published:Updated:

இப்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வு இல்லை: ஜெய்ப்பால் ரெட்டி

இப்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வு இல்லை:  ஜெய்ப்பால் ரெட்டி
இப்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வு இல்லை: ஜெய்ப்பால் ரெட்டி
இப்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வு இல்லை:  ஜெய்ப்பால் ரெட்டி

புதுடெல்லி:  பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய்களின் விலையை உயர்த்தும் திடடம்  எதுவும் இப்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர்  ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய அவர்,"விலை உயர்வு  பற்றிய இறுதி முடிவினை மத்திய அமைச்சரவைதான் எடுக்கும்.ஆனால் தற்போதைக்கு  அப்படியான பரிந்துரை எதுவும் இல்லை.

##~~##
ஆனால், விரைவில் இது குறித்த சற்று கடினமான முடிவினை மத்திய அமைச்சரவை  எடுக்க உள்ளது”என்றார்.
முன்னதாக இன்று தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவதாகவும்,எனவே விலையை  உயர்த்த வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள்,வலியுறுத்திய நிலையில்,இன்று  இரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்படலாம் என்று தகவல்  வெளியானது குறிப்பிடத்தக்கது.