Published:Updated:

''இனி, உயர் அதிகாரிகள் ரயில்வே வாரியத் தலைவரை நேரில் சென்று வரவேற்க வேண்டாம்!'' ரயில்வே துறை நடவடிக்கை!

''இனி, உயர் அதிகாரிகள் ரயில்வே வாரியத் தலைவரை நேரில் சென்று வரவேற்க வேண்டாம்!'' ரயில்வே துறை நடவடிக்கை!
''இனி, உயர் அதிகாரிகள் ரயில்வே வாரியத் தலைவரை நேரில் சென்று வரவேற்க வேண்டாம்!'' ரயில்வே துறை நடவடிக்கை!

''இனி உயர் அதிகாரிகள், ரயில்வே வாரியத் தலைவரை நேரில் சென்று வரவேற்க வேண்டாம்'' என ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துறைசார்ந்த பணி காரணமாக வருகைபுரியும் ரயில்வே வாரியத் தலைவர், உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர்களுக்கு அடுத்த நிலையில் பணிபுரியும் அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்று, அவர்கள் பணிமுடிந்து திரும்புகையில் வழியனுப்ப வேண்டும் என்பது கடந்த 36 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்தது. இதற்கு முடிவுகட்டும் வகையில் புதிய வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளார், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ரயில்வே வாரியத் தலைவரை விமான நிலையம் அல்லது ரயில் நிலையங்களுக்குச் சென்று உயர் அதிகாரிகள் இனி வரவேற்கத் தேவையில்லை. அதேபோல, அவர் பணி முடிந்து வீடு திரும்பிச் செல்லும்போது, ரயில் நிலையம் அல்லது விமான நிலையத்துக்குச் சென்று உயர் அதிகாரிகள் வழியனுப்பவும் தேவையில்லை. அந்த நடைமுறையை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும். ரயில்வே அதிகாரிகள் நீண்டநாள்கள் விடுப்பில் இருக்கக்கூடாது. பணி காரணமாக வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொண்டால், சொகுசு வசதிகளை எதிர்பார்க்கக்கூடாது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

''யாரும் மலர்க்கொத்து அல்லது பரிசுப் பொருள்கள் கொடுத்து தன்னை வரவேற்க வேண்டாம்'' என ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹனியும் தெரிவித்துள்ளார்.