
மும்பை:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதன் எதிரொலியாக பெட்ரோல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.கடந்த வாரம் வியாழக்கிழமை 116 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, இன்று 106 டாலராக குறைந்துள்ளது.
கடந்த 5 நாட்களுக்குள் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலையில் 10 டாலர் வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்த விலை வீழ்ச்சி மேலும் தொடரும் என்று தெரிகிறது. இந்த நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக திருப்தி தரும் வகையில் உள்ளது என்றும், எனவே பெட்ரோல் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
##~~## |
