Published:Updated:

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு!

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு!
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு!
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு!

புதுடெல்லி:டீலர்களுக்கான கமிஷன் தொகை அதிகரித்ததால், பெட்ரோல் விலை ஒரு  லிட்டருக்கு 29 பைசாவும், டீசல் விலை 20 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க் டீலர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்த முடிவு  செய்தது.இதற்கான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது.பெட்ரோலுக்கான கமிஷன்  ஒரு லிட்டருக்கு ரூ.1.49-ல் இருந்து ரூ.1.78 ஆகவும், டீசல் கமிஷன் லிட்டருக்கு  91 பைசாவில் இருந்து ரூ.1.08 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

##~~##
இதையடுத்து பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 29 பைசாவும், டீசல் விலை 20  பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.67.90-ல் இருந்து ரூ.68.19  ஆக அதிகரித்தது. இதேபோல் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.46.95-ல் இருந்து  ரூ.47.15 ஆனது. இந்த விலை உயர்வு அந்தந்த மாநில வரியைப் பொறுத்து  மாறுபடும்.பெட்ரோல் விலை 29 பைசா முதல் 37 பைசா வரையிலும், டீசல் விலை  20 பைசா முதல் 24 பைசா வரையிலும் அதிகரித்துள்ளது.