Published:Updated:

`இளைஞர்களுக்குத் திறன் வளர்ச்சிப் பயிற்சி முக்கியம்!' - வெங்கைய நாயுடு

ர.பரத் ராஜ்
`இளைஞர்களுக்குத் திறன் வளர்ச்சிப் பயிற்சி முக்கியம்!' - வெங்கைய நாயுடு
`இளைஞர்களுக்குத் திறன் வளர்ச்சிப் பயிற்சி முக்கியம்!' - வெங்கைய நாயுடு

`இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்தால் மட்டும் போதாது. அவர்களுக்குத் திறன் வளர்ச்சிப் பயிற்சி முக்கியம்' என்று இந்திய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு  ஹைதராபாத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.  

`இளைஞர்களுக்குத் திறன் வளர்ச்சிப் பயிற்சி முக்கியம்!' - வெங்கைய நாயுடு

 `வரும் காலங்களில் நம் நாட்டின் வளர்ச்சிக்கு நடுத்தர வர்க்கத்தினர்தான் முக்கியப் பங்காற்றுவார்கள். நம் நாட்டில் மிக அதிக ஜனத்தொகை இருக்கிறது. குறிப்பாக, இந்த மக்கள் தொகையில் 65 சதவிகிதத்தினர் 35 வயதுக்கும் குறைவானவர்கள். இந்த அதிக அளவிலான இளைஞர் கூட்டத்தை வளர்ச்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, தற்சமயத் தேவை என்பது இளைஞர்களுக்கு வேலையை உருவாக்குவதுதான். இளங்கலைப் பட்டம் முடிக்கும் இளைஞர்கள் மட்டும் வளர்ச்சிக்குப் போதாது. அவர்களுக்குத் திறன் வளர்ச்சிப் பயிற்சி மிக அவசியம்' என்று பேசியுள்ளார்.

மேலும் அவர், ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்புகுறித்துப் பேசுகையில், `சேவை மற்றும் சரக்கு வரி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை கொண்டுவந்ததன் முக்கியக் காரணம், வரி செலுத்துவதை அதிகரிக்கவே' என்று தெரிவித்தார்.