Published:Updated:

புதிய தலைமைச் செயலக வழக்கு தள்ளுபடி!

Vikatan Correspondent
புதிய தலைமைச் செயலக வழக்கு தள்ளுபடி!
புதிய தலைமைச் செயலக வழக்கு தள்ளுபடி!
புதிய தலைமைச் செயலக வழக்கு தள்ளுபடி!

சென்னை: புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்க்கும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கட‌ந்த ‌திமுக ஆ‌ட்‌சி‌யி‌ல் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்  செயலகம் கட்டப்பட்டது. பின்னர் ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்த அதிமுக அரசு அதை பயன்படுத்தாமல்,  பழைய தலைமைச் செயலகத்தையே பயன்படுத்தியது.

இந்த நிலையில், புதிய தலைமைச்செயலகத்தை பல்நோக்கு நவீன சிறப்பு  மரு‌த்துவமனையாக மா‌ற்ற‌ப்போவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதனை எதிர்த்து வழ‌க்க‌றிஞ‌ர் ஆர்.வீரமணி, செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் வழ‌க்கு  தொட‌ர்‌ந்திருந்தார்.இவர் தவிர மேலும் சில வ்ழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.

##~~##
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  புதிய தலைமைச்செயலகத்தை இடித்து  மருத்துவமனையாக மாற்ற இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், அனைத்து  மனுக்களையும் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பு வழங்கியது.
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது அரசின் கொள்கை  முடிவு என்றும், அரசின் கொள்கக முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும்  கூறிய நீதிபதிகள் பால் வசந்த குமார் மற்றும் பாஷா ஆகியோரடங்கிய அமர்வு தனது  தீர்ப்பில் கூறியுள்ளது.
மேலும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து தலைமைச் செயலகத்தை  மாற்றியதில் விதி மீறல் இல்லை என்றும், ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டுக்கு  பல்நோக்கு மருத்துவமனை தேவை என்றும் நீதிபதிகள் பால் வசந்த குமார் மற்றும்  பாஷா ஆகியோரடங்கிய அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.