Published:Updated:

மருத்துவமனையாக மாறியது புதிய தலைமை செயலக கட்டடம்!

மருத்துவமனையாக மாறியது புதிய தலைமை செயலக கட்டடம்!
மருத்துவமனையாக மாறியது புதிய தலைமை செயலக கட்டடம்!
மருத்துவமனையாக மாறியது புதிய தலைமை செயலக கட்டடம்!

சென்னை: புதிய தலைமை செயலக கட்டடம்,  பன்நோக்கு மருத்துவமனையாக இன்று செயல்பட தொடங்கியது.

புதிய தலைமை செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற தடை கோரிய  வழக்குகள் அனைத்தும் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து மருத்துவமனையாக  மாற்றும் பணிகள் அன்றைய தினம் இரவே தொடங்கியது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளை மனுதாரர் செய்து கொண்டிருந்தார். இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை உடனே எடுத்துக் கொள்ளவில்லை. உடனடியாக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சொல்லிவிட்டது.

இந்நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று காலை புதிய தலைமைச் செயலகம் கட்டத்தில் திடிரென்று அரசு மருத்துவனமனை என்று போர்டு வைக்கப்பட்டது. டாக்டர்கள்,  நர்சுகள், ஊழியர்கள் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து வந்திருந்தனர். இதயம், நரம்பியல் உட்பட மூன்று பிரிவுகள் முதலில் தொடங்கியது. ஓ.பி. பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் புதிய தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மருத்துவமனையாக மாறியது புதிய தலைமை செயலக கட்டடம்!

கட்டடத்தின் உள்ளே மூன்று அறைகளில் புற நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.

##~~##
15 டாக்டர்கள், 10 செவிலியர்கள் பணியில் அமர்ந்து நோயாளிகளை பரிசோதித்து  தேவையான சிகிச்சை பரிந்துரைகள் கூறினர். இருதயம், நரம்பியல் சம்பந்தப்பட்ட  டாக்டர்களும் வந்திருந்து ஆலோசனை வழங்கினார்கள்.
அங்குள்ள வளாகத்தில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில்  வைக்கப்பட்டிருந்தன. மருத்துவக் கல்வி இயக்குனர் புஷ்பதாராவும் இன்று வந்திருந்து  மருத்துவமனை செயல்படுவதை பார்வையிட்டார்.