Published:Updated:

புதிய தலைமைச் செயலகத்தில் இயங்கிய மருத்துவமனை மூடல்!

புதிய தலைமைச் செயலகத்தில் இயங்கிய மருத்துவமனை மூடல்!
புதிய தலைமைச் செயலகத்தில் இயங்கிய மருத்துவமனை மூடல்!
புதிய தலைமைச் செயலகத்தில் இயங்கிய மருத்துவமனை மூடல்!

சென்னை புதிய தலைமைச் செயலகத்தில் இயங்கிவந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன்அறிவிப்பு இன்றி மூடப்பட்டது. இதனால், இங்குவந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்..

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தலைமைச் செயலகம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டது. மேலும் புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்றும் அறிவித்தது.

இதை எதிர்த்து வீரமணி என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச

##~~##
நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்ட து.

இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட துறைகள் இயங்கத் தொடங்கின. அரசு மருத்துவ மனையில் இருந்து நோயாளிகள் இங்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்ற தேசிய பசுமைத் தீர்பாயம் இடைக்கால தடைவிதித்தது.

மேல் முறையீட்டு  மனு நிலுவையில் இருக்கும்போது எதற்காக மருத்துவமனை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை தொடங்கியது என்று கேள்வியும் எழுப்பியது. மேலும், மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை கட்டடத்தில் மாற்றம் செய்யவோ, மருத்துவ மனை நடவடிக்கைகளை செயல்படுத்தவோ தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று எந்த அறிவிப்பும் இன்றி மருத்துவமனை மூடப்பட்டது. மருத்துவமனை செயல்படும் என்ற எண்ணத்தில் இங்குவந்த நோயாளிகள் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வேறுவழியின்றி மீண்டும் சென்னை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.