Published:Updated:

`மன உளைச்சலுடன் நீட் தேர்வு எழுதச் செல்கிறேன்' - எர்ணாகுளம் புறப்பட்ட மாணவன் வேதனை

`மன உளைச்சலுடன் நீட் தேர்வு எழுதச் செல்கிறேன்' - எர்ணாகுளம் புறப்பட்ட மாணவன் வேதனை
`மன உளைச்சலுடன் நீட் தேர்வு எழுதச் செல்கிறேன்' - எர்ணாகுளம் புறப்பட்ட மாணவன் வேதனை

நீட் தேர்வைக்கூட தமிழகத்தில் எழுத முடியாமல்போனது வேதனையாக உள்ளதாக மன்னார்குடியைச் சேர்ந்த மாணவன் ஆகாஷ் தெரிவித்தார்.

''நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் பல கட்சிகள் போன வருஷம் போராடினாங்க. அப்போது இந்த வருடம் நீட்தேர்வுக்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்றார்கள். நாங்களும் நம்பினோம். ஆனால், நீட் தேர்வு தமிழகத்திலேயே எழுதுவதற்குக்கூட முடியாமல் போய்விட்டது. இனி எல்லோரும் என்ன செய்யப்போகிறோம்'' என மானவர்கள் வேதனை தெரிவித்தனர்.

நீட் தேர்வு எழுதுவதற்கு கடும் மன உளைச்சலுடன் எர்ணாகுளம் புறப்பட்டுக்கொண்டிருந்தார் ஆகாஷ் என்ற மாணவன். ஆகாஷிடம் பேசினோம். ''நான் மன்னார்குடியில் இருக்கிறேன். என் அப்பா மின்சாரத்துறையில் பணி புரிந்து வருகிறார். அவரைப் போல் நான் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக என்னை நன்றாகப் படிக்க வைத்தார். நான் டாக்கர் ஆகணும்ப்பா என அப்பாவிடம் அடிக்கடி சொல்வேன்.
நீட் தேர்வு எழுதுவதற்காகக் கொடுத்த அப்ளிகேஷனில் பக்கமாக இருக்கக்கூடிய திருச்சி, கோயம்புத்தூர் அல்லது சென்னை கேட்டிருந்தேன். ஆனால், இவர்கள் எனக்கு எர்ணாகுளத்தில் சென்டர் ஒதுக்கியுள்ளார்கள். எர்ணாகுளத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாம் எனக்கு ஒதுக்கபட்ட தேர்வு மையம். 

எனக்கு தமிழைத் தவிர, வேறு எந்த மொழியும் தெரியாது. மன்னார்குடியிலிருந்து எர்ணாகுளம் செல்லும்போது பயணத்தின் களைப்பில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல்கூட போகலாம். அங்கு சாப்பிடும் உணவு ஒத்துக்குமான்னு தெரியலை. நான் என்ன, சுற்றிப் பார்ப்பதற்கு சுற்றுலாவா போறேன். சரி போனா போகுது என விட்டுத் தள்ளுவதற்கு. தேர்வு எழுதச் செல்கிறேன். சோர்வு இல்லாமல் இருந்தால்தான் நன்றாக எழுத முடியும். நமக்கு பழகிய இடத்தில் தேர்வு மையத்தை ஒதுக்காததால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். அப்பாதான் என்னைத் தேற்றி அழைத்துக்கொண்டு செல்கிறார். மாணவர்களாகிய எங்கள் மனதைப் பற்றிக் கொஞ்சம்கூட அரசு நினைக்கவில்லை. போன வருஷம் நீட் தேர்வுக்காக நடந்த போராட்டங்களின்போது இந்த வருஷம் எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள். ஆனால் இப்போது தேர்வைக்கூட நம் மண்ணில் எழுத முடியவில்லை.

நுழைவு டிக்கெட் வந்து 15 தினங்களுக்கும் மேலாக இருக்கும். ஆனால், இப்பதான் முக்கிய அரசியல் கட்சிகள் இதற்காகக் குரல் கொடுத்து போராடிக்கிட்டு இருக்காங்க. இதைக் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாம். பிஞ்சு மனசை வெம்ப வைக்கிறாங்க சார் எனச் சொன்னார். தஞ்சாவூரைச் சேர்ந்த நிகரன் என்ற மாணவனின் தந்தை மாவட்டத் தலை நகரங்களான தஞ்சாவூரில்கூட தேர்வு மையத்தை அமைக்காதது வேதனை. இங்கு விவசாயம்தான் முக்கிய தொழில். எந்த வெளி உலகமும் தெரியாத அவர்கள், அடுத்த மாநிலத்துக்கு சென்று எப்படித் தேர்வு எழுதுவார்கள். அரசு என்பது அனைத்தையும் கவனத்தில் கொண்டுதான் எல்லாவற்றையும் நடைமுறைப் படுத்த வேண்டும். ஆனால், நடப்பதையெல்லாம் பார்க்கும்போது வரும் காலத்தில் தமிழக மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகத்தான்  இருக்கும்'' என வெடித்தார்.
 

அடுத்த கட்டுரைக்கு