Published:Updated:

`குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்!’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா

கேரள மாநிலத்தில் சிறைச்சாலைகளில் குற்றம் செய்யாதவர்களும் பணம் கொடுத்து சிறைச்சாலையில் தங்கும் புதிய சுற்றுலாவுக்கு, அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

குற்றம் செய்துதான் ஜெயிலுக்குப் போக வேண்டும் என்பதில்லை. வடிவேல் மாதிரி `நானும் ஜெயிலுக்குப் போறேன்' என உற்சாகமாக கூவிக்கொண்டே சிறைக்குச் சென்று வரலாம். அதற்குப் பணம் கொடுத்தால் மட்டும்போதும். மன அழுத்தத்திலிருந்து விடுபட விதவிதமான சுற்றுலாக்களில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாகச் சிறைச்சாலை சுற்றுலாவை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது கேரள அரசு.

தெலங்கானாவில் சிறை சுற்றுலா ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 24 மணி நேரம் சிறையில் சென்றுவர ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தெலங்கானாவைப் பின்பற்றி கேரளாவில் சிறைச்சாலை சுற்றுலா அறிமுகப்படுகிறது. இதற்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது கேரள அரசு. 24 மணி நேரம் ஜெயிலில் கைதிகளின் யூனிபார்முடன் தங்கலாம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்காக ஆன் லைனில் புக் செய்ய வேண்டும். சிறையில் இருப்பதுபோன்ற சூழலை உருவாக்கும் விதமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சிறை ஒதுக்கப்பட இருக்கிறது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பழைமையான விய்யூர் மத்திய சிறைச்சாலையில் செயல்படும் அருங்காட்சியகம் அருகே இந்தக் சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளதாம். சிறை சுற்றுலா குறித்த விபரங்களை அறிந்துகொள்வதற்காகக் கேரள சிறைத்துறை டி.ஜி.பி ஸ்ரீலேகா, தெலங்கானா சிறைச்சாலையைப் பார்வையிடச் செல்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism