Published:Updated:

``என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுங்கள்!" - கலெக்டரிடம் ராமுதாய் கணவர் கண்ணீர்

பாலமுருகன். தெ
``என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுங்கள்!" - கலெக்டரிடம் ராமுதாய் கணவர் கண்ணீர்
``என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுங்கள்!" - கலெக்டரிடம் ராமுதாய் கணவர் கண்ணீர்

பெண் சிசுக்கொலை பட்டியலிலிருந்து இன்னும் உசிலம்பட்டி என்கிற கறை மறையவில்லை. அதற்குள் சமீபத்தில் செவிலியர் ஒருவர் பெண் சிசுவை கருக்கலைப்பு செய்தபோது, பெண் ஒருவர் இறந்துபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் மூன்று பெண் குழந்தைகளும் கணவரும் கருணையின் அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

``என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுங்கள்!" - கலெக்டரிடம் ராமுதாய் கணவர் கண்ணீர்

மதுரை மாவட்டம், பேரையூரை அடுத்து உத்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமுதாய். இவரின் கணவர் ராமர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இதற்கிடையில் மீண்டும் ராமுதாய் கர்ப்பமாகியிருக்கிறார். இந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருக்கக் கூடாது என்பதற்காக உசிலம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் பார்த்திருக்கிறார் அவர். அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது பெண் குழந்தை எனத் தெரிந்ததும் ராமுதாய் டாக்டர்களிடம் கருக் கலைப்பு செய்யச் சொல்லியிருக்கிறார். ஆனால், டாக்டர்கள் மறுத்துவிட்டார்கள். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த செவிலியர் ஜோதிலெட்சுமி, ராமுதாயிடம் ஆசைவார்த்தை சொல்லி கருவை கலைத்துவிடலாம். அதற்கு 20,000 ரூபாய் செலவாகும் என்றதும் அந்தப் பணத்தை ரெடி பண்ணிக்கொண்டு செவிலியர் குடியிருக்கும் தொட்டப்பநாயக்கனூருக்குச் சென்றுவிட்டார் ராமுதாய். அங்கு சென்றவருக்கு முறையான மாத்திரை மருந்து கொடுக்காமல் கருக்கலைப்பு செய்தபோது இறந்துபோனார் ராமுதாய்.

இச்சம்பவம் காட்டுத் தீப்போல் பரவியது. பின்னர் ஜோதி லெட்சுமி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது ராமுதாய் இறந்துகிடந்தார். அவர் இறந்தது தெரிந்ததும் செவிலியர் தப்பிச் சென்றுவிட்டார். தற்போது மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார் ராமர். ``அரசாங்கம் கருணை அடிப்படையில் என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் உதவி செய்திட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்திருக்கிறேன்'' என்று கண்ணீர் மல்க கூறினார்.