Published:Updated:

`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள்! - ரயில்வே ரேடாரில் பயணிகள்

`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள்! - ரயில்வே ரேடாரில் பயணிகள்
`ரயில் பெட்டிகளில் மாயமான 21 லட்சம் படுக்கையறைப் பொருள்கள்! - ரயில்வே ரேடாரில் பயணிகள்

ரயில் ஏ.சி வகுப்புகளில், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான பொருள்கள் காணாமல் போனதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில், மக்கள் அதிக அளவில் பயணிப்பது ரயில்கள் மூலம்தான். தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்கள்மூலம் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் ரயில்களில் ஏ.சி பெட்டிகளில் காணாமல்போன படுக்கை விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை மட்டும் 21 லட்சத்தைத் தாண்டுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,``ரயில்களில் ஏ.சி பெட்டியில் பயணம் செய்பவர்களுக்குத் தேவையான  துண்டு, பெட்ஷீட், தலையணை உறை உள்ளிட்ட பல படுக்கையறைப் பொருள்கள் வழங்கப்படும். கடந்த ஓராண்டில் மட்டும் ரயில்களில் சுமார் 21 லட்சத்துக்கும் அதிகமான பொருள்கள் காணாமல் போயுள்ளதாக ஊழியர்கள் கூறுகின்றனர். 

ரயில்களில் காணாமல்போன பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது துண்டுகள்தான். 12,83,415 துண்டுகள் கடந்த ஓராண்டில் காணாமல் போயுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், படுக்கை விரிப்புகளும் (4,71,077) தலையணை உறைகளும் (3,14,952) மாயமாகியுள்ளன. மேலும், 56,287 தலையணைகள் ஓராண்டில் காணாமல்போயுள்ளன.  அவற்றின் மதிப்பு ரூ.14 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தப் பொருள்கள் அனைத்தும் உயர்தர ஏ.சி வகுப்பில் காணாமல் போயுள்ளதால், அதில் பயணம் செய்யும் பயணிகள் மீதுதான் சந்தேகம் எழுந்துள்ளது” என்றார். 

ரயில் கழிவறையில் இருக்கும், `கப்’கள். பைப்புகள், கண்ணாடிகள் எனப் பல பொருள்கள், இந்த காணாமல்போன பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியாவில், தெற்கு ரயில்வேயில்தான் அதிக அளவில் பொருள்கள் காணாமல்போயுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது. 
 
ஏ.சி பெட்டிகளில் பயணம்செய்யும் பயணிகளுக்கு மேலும் சிறப்பான வசதிகள் செய்துதர ரயில்வே நிர்வாகம் முயலும் நிலையில், இந்தத் தகவல் அதிர்ச்சியளிப்பதாக ரயில்வே நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இதனால், இனிவரும் காலங்களில் ரயில்களில் விலை குறைவான, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான ஒன் யூஸ் துண்டுகளை வழங்குவதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.