பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளைக் குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கும் மேற் பட்டோரை பயங்கர வாதிகள் படுகொலை செய்தனர். பயங்கரவாதிகளின் ஆதரவுபெற்ற அல்லா-ஓ-அக்பர் தெஹ்ரிக் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் மண்ணைக் கவ்வவைத்துவிட்டார்கள் பாகிஸ்தான் மக்கள்.

ஜூலை 25-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத்் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் நாற்காலியில் அமரப்போகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான்.

342 இடங்களைக்கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில், இம்ரான் கானின் பி.டி.ஐ, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) – பி.எம்.எல். (என்), முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.டி.ஐ) ஆகியவை பிரதான கட்சிகளாகப் போட்டியிட்டன. ஆட்சி அமைக்க 172 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், 116 இடங்களில் வெற்றிபெற்றுத் தனிப்பெரும் கட்சியாக பி.டி.ஐ உருவெடுத்தது. நவாஸ் ஷெரீப் கட்சி 64 இடங்களிலும், பிலாவல் கட்சி 43 இடங்களிலும் வென்றுள்ளன. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் இம்ரான்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அரசியல் கட்சியைத் தொடங்கிய இம்ரான் கானுக்கு... பெனாசிர் படுகொலை செய்யப்பட்டு, ஊழல் வழக்குகளில் நவாஸ், ஆசிப் அலி ஜர்தாரி எனச் சிறையில் தள்ளப்பட்ட சூழலில், 22 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியதிகாரத்துக்கான கதவுகள் இப்போதுதான் திறக்கப்படுகின்றன. கரன்சி மதிப்பு வீழ்ச்சி, எண்ணெய் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, தண்ணீர்த் தட்டுப்பாடு என வரிசை கட்டி நிற்கும் புதிய பிரச்னைகளைத் தீர்ப்பது இம்ரான் கானுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

இம்ரான் ஜெயிப்பதற்கு, ‘ஊழலுக்கு எதிரானவர்’ என்ற கிளீன் இமேஜ் உதவி செய்திருக்கலாம். ஆனால், பிரதமர் நாற்காலியில் அமரப்போகும் இம்ரான் கான், பயங்கரவாதிகள் விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார் என்பது முக்கியமானது.

ஆரம்பகாலத்தில், மத அடிப்படை வாதிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக இருந்தவர்தான் இம்ரான் கான். சில ஆண்டுகளுக்குமுன், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிறிஸ்தவப் பெண் ஒருவர், முகமது நபியை இழிவாகப் பேசிவிட்டதாகப் புகார் எழுந்து, அவர் கைதுசெய்யப்பட்டார். நபியை இழிவாகப் பேசுதல் என்பது அங்கு மரணதண்டனைக்குரிய குற்றம். அந்தப் பெண்ணை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போதைய பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் டசீர் குரல் கொடுத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிமான டசீர், நபியை இழிவாகப் பேசியவரை மன்னிக்கச் சொல்வதா என்று இஸ்லாமியத் தீவிரவாதிகளும் முல்லாக்களும் கொதித்தெழுந்தனர். சல்மான் டசீரை அவரின் பாதுகாவலரே சுட்டுக்கொன்றார். ‘சல்மான் டசீர் ஒரு கடவுள் நிந்தனையாளர். கடவுள் நிந்தனைக்கான தண்டனைதான் இது’ என்று அந்தக் கொலையை வரவேற்றார்கள் இஸ்லாமிய மதத் தலைவர்கள்.

அந்தச் சூழலில், டசீர் படுகொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார் இம்ரான் கான். மேலும், முல்லாக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசை, இம்ரான் கான் விமர்சித்தார். அதற்கடுத்து வந்த தேர்தலில், இம்ரான் கான் தோல்வியைத் தழுவினார். ஆனால், பயங்கரவாதிகள் மற்றும் மத அடிப்படைவாதிகள் விவகாரத்தில், இம்ரான் கானின் இன்றைய நிலைப்பாடு வேறு. இப்போது அவருக்கு, ‘தாலிபான் கான்’ என்று சிலர் பெயர் சூட்டியுள்ளனர். அந்தளவுக்கு, அவர் பயங்கர வாதிகளுக்கு ஆதரவாக மாறிப்போயிருக்கிறார்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய பாகிஸ்தானின் 70 ஆண்டுக்கால வரலாற்றில், பெரும்பாலான காலத்தில் ராணுவமே ஆட்சிசெய்துள்ளது. பாகிஸ்தானை யார் ஆள வேண்டும் என்பதை முடிவுசெய்வதே ராணுவம்தான். தன் சொல்லைத் தட்டாத பிள்ளையாக இம்ரான் கான் இருப்பார் என்ற நம்பிக்கையில், பிரதமர் நாற்காலியில் அவரை அமரவைப்பதற்காக, ராணுவம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “ராணுவத்தால் ஆட்டிவைக்கும் பொம்மையாகவே இம்ரான் கான் இருப்பார்” என்கிறார் அவரின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான்.

தேர்தல் வெற்றிக்குப்பின் ஆற்றிய உரையில், “இந்திய மீடியாக்கள் என்னை ஒரு பாலிவுட் சினிமா வில்லனைப்போலச் சித்திரிக்கின்றன” என்று வருத்தப்பட்ட கான், “இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேணவே விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சொன்னதைச் செய்தால் நல்லது இம்ரான்!