Published:Updated:

`அரசிடம் அனுமதி கேட்டிருக்கோம்; 2 மாதங்களில் ஆலையைத் திறப்போம்!’ - ஸ்டெர்லைட் சி.இ.ஓ அறிவிப்பு

`அரசிடம் அனுமதி கேட்டிருக்கோம்; 2 மாதங்களில் ஆலையைத் திறப்போம்!’ - ஸ்டெர்லைட் சி.இ.ஓ அறிவிப்பு
`அரசிடம் அனுமதி கேட்டிருக்கோம்; 2 மாதங்களில் ஆலையைத் திறப்போம்!’ - ஸ்டெர்லைட் சி.இ.ஓ அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் குறைபாடு இருப்பதாக மட்டுமே பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளதே தவிர, விதிகளுக்கு உட்பட்டுத்தான் ஆலையை செயல்படுத்தி வருகிறோம் என அதன் முதன்மைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராடினர். இந்தப் போராட்டத்தில் 13 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து இது தொடர்பாக 3 பேர் அடங்கிய தருண் அகர்வால் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையில் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வேதாந்தா குழும சி.இ.ஓ ராம்நாத் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், `ஸடெர்லைட் விவகராத்தில் உண்மையைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய 3 பேர் அடங்கிய தருண் அகர்வால் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு களத்துக்குச் சென்று ஆய்வு செய்தது. மக்களிடமும் அவர்கள் கருத்துக் கேட்டனர். பல்வேறு தகவல்களை நாங்கள் தீர்ப்பாயத்திடம் கொடுத்தோம். விரிவான ஆய்வுக்குப் பின்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வேதாந்தா குழுமம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்புதான் பசுமைத் தீர்ப்பாயம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் குறைபாடு இருப்பதாக மட்டுமே பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளதே தவிர, விதிகளுக்கு உட்பட்டுதான் ஆலையைச் செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் 5 பிரச்னைகளை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த 5 பாயின்ட்களும் வெறும் தொழில்நுட்பக் குறைபாடு தொடர்புடையதுதான். முக்கியமாக நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து கூறப்பட்டுள்ளது. ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் மாசுக்கட்டுபாட்டு வாரியமே நிலத்தடி நீரை ஆய்வு செய்து வருகிறது. கடந்த 22 வருடமாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இதற்கான அறிக்கையும் அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். இது தொடர்பாக மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளோம்.

 மக்களுக்கு நல்லது செய்வதுதான் எங்கள் எண்ணம். அவர்களுக்கு என்ன வேணுமோ அதான் செய்கிறோம். தொழில்நுட்பக் குறைபாடு இருப்பதாகத்தான் பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளதே தவிர, விதிகளுக்கு உட்பட்டுதான் ஸ்டெர்லைட் ஆலை செயல்படுகிறது” என்றார். மேலும், மில்லியன்மரங்களை நடும் முயற்சியையும், நகரத்தைச் சுற்றி பூங்காக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் பள்ளியும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையும் தூத்துக்குடியில் அமைக்க இருபத்தாக வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.