Published:Updated:

`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடர்கிறது!’ - தூத்துக்குடி ஆட்சியர்

`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடர்கிறது!’ - தூத்துக்குடி ஆட்சியர்
`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடர்கிறது!’ - தூத்துக்குடி ஆட்சியர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பான தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி தெரிவித்துள்ளார்.

`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடர்கிறது!’ - தூத்துக்குடி ஆட்சியர்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், ஆலையை மீண்டும் திறக்கலாம் என சில நிபந்தனைகளுடன் அளிக்கப்பட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கக் கோரியும், தீர்ப்பை எதிர்த்தும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அமல்படுத்தக்கோரியது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, ``கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஒரு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு இறுதி தீர்ப்பு இல்லை. அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என அப்போதே அரசு தெரிவித்தது. அதன்படி, பசுமை தீர்ப்பாயத் தீர்ப்பின் தொழில்நுட்பக் காரணிகளை எடுத்து ஆராய்ந்து, அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்டது.

`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடர்கிறது!’ - தூத்துக்குடி ஆட்சியர்

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் யாரும் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என உத்தரவிடவில்லை. ஆலைக்கு எதிரான, அரசின் சட்டப் போராட்டம் தொடர்கிறது. வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, இப்போது உள்ள நிலையே தொடரும். பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவிலும் ஆலை நிர்வாகத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றிய பின், ஆலை நிர்வாகம், மாசுக் கட்டுபாட்டு வாரியத்துக்கு விண்ணப்பித்தால் அனுமதி பற்றி முடிவு செய்யலாம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் கைக்கு வரவில்லை. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்துதான் மேல் முறையீடு  செய்யப்பட்டிருக்கிறது. அது வரையில் ஆலையை திறக்க முடியாது. ஆலைக்கு எதிரான தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும்" என்றார்.