Published:Updated:

பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த பசும்பொன் பாண்டியன் கைது!

பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த பசும்பொன் பாண்டியன் கைது!
பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த பசும்பொன் பாண்டியன் கைது!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த பசும்பொன் பாண்டியன் கைது!

எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை மதுரை வருகிறார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி காட்டப்போவதாக ம.தி.மு.க உட்பட சில கட்சிகள், அமைப்புகள் அறிவித்துள்ளன. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டப்போவதாக அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின்  பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியனும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் பசும்பொன் பாண்டியன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தங்கள் தலைவர் பசும்பொன் பாண்டியன் கைதைக் கண்டித்து அவருடைய ஆதரவாளர்கள் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோல் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்துள்ளவர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.