Published:Updated:

தொடரும் கடல் சீற்றம் - கன்னியாகுமரியில் 2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தம்!

தொடரும் கடல் சீற்றம் - கன்னியாகுமரியில்  2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தம்!
தொடரும் கடல் சீற்றம் - கன்னியாகுமரியில் 2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தம்!

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கடற்கரையில் நிறுத்தப்பட்ட வள்ளங்களைப் பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

தொடரும் கடல் சீற்றம் - கன்னியாகுமரியில்  2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தம்!

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயில், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, திருப்பதி வெங்கடாசலபதி கோயில் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல இடங்கள் உள்ளன. மேலும் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை முக்கடல் சங்கமத்தில் கண்டு ரசிக்கலாம். கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடரும் கடல் சீற்றம் - கன்னியாகுமரியில்  2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தம்!

நேற்று கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுகள் இயக்கப்படவில்லை. இன்றும் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுவதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று இரண்டாவது நாளாக படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. வள்ளங்களை கடல் அலை இழுத்துச் செல்லாமல் இருப்பதற்காக அவற்றை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.