Published:Updated:

கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்! - புதுக்கோட்டையில் திறப்பு

கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்! - புதுக்கோட்டையில் திறப்பு
கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்! - புதுக்கோட்டையில் திறப்பு

தமிழகத்தில் முதல்முறையாக, கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் புதுக்கோட்டையில் திறந்துவைக்கப்பட்டது.

கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்! - புதுக்கோட்டையில் திறப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் தமிழ்நாடு சிறைத் துறை இணைந்து, பெட்ரோல் பங்க் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக, தமிழகத்தில் சென்னை, கோவை, வேலூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு,  பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு, சிறைச்சாலைகளில் தண்டனைக் கைதிகளாக இருப்பவர்களுக்குப் பணி கொடுக்கத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, புதுக்கோட்டை சிறைத்துறை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தொடங்கியது. கட்டுமானப் பணிகள் முடிவுற்று, இன்று பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், திருச்சி சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம், புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷனி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்! - புதுக்கோட்டையில் திறப்பு

இது, 24 தண்டனைக் கைதிகளைக்கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்க் ஆகும். திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக இருந்துவந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த கைதிகள் 24 பேர், சிறைத்துறை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் இந்த பெட்ரோல் பங்க்கில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்புதல், கேஷியர், ஏர் செக்கிங் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். 4 பம்ப்பிங்க் மிஷின்களுடன் 24மணி நேரமும் செயல்படும் இந்த பெட்ரோல் பங்க்கில் 3 ஷிஃப்ட்டுகளாகக் கைதிகள் பணிபுரிகின்றனர். இவர்களைக் கண்காணிப்பதற்காக, 2 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பணிபுரியும் கைதிகளுக்கு சம்பளம் வழங்கும். வரும் காலங்களில் சிறைகளில் கைதிகளால் தயாரிக்கப்படும் உணவு வகைகள், கைவினைப்பொருள்கள் ஆகியவற்றை பெட்ரோல் பங்கில் வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறுகையில், ``தண்டனைக் கைதிகளில் முக்கால்வாசி தண்டனை அனுபவித்த, நன்னடத்தைக் கைதிகள் தேர்வுசெய்யப்பட்டு, பணி  யமர்த்தப்பட்டுள்ளனர். கைதிகளால் நடத்தப்படும் இந்த பெட்ரோல் பங்க்கிற்கு புதுக்கோட்டை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என  நம்புகிறேன்’’ என்றார்.